வருணின் சுழலில் சிக்கிய நியூசி அணி.. வில்லியம்சன் போராட்டம் வீண்.. ஆஸியை எதிர்கொள்ள தயாராகும் இந்தியா.. CT 2025

0
474

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி இன்று துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை தோற்கடித்தது.

- Advertisement -

இந்தியா நியூசிலாந்து கடைசி லீக்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் லீக் தொடரின் கடைசி ஆட்டம் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. சுழலுக்கு சாதகமாக இருந்த இந்த ஆடுகளத்தில் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக சுழற் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. இதில் இந்திய அணியின் அபாரமான 3 தொடக்க வீரர்கள் இந்த முறை விரைவிலேயே வெளியேறினார்கள்.

ரோகித் சர்மா 15 ரன், கில் 2 ரன் மற்றும் விராட் கோலி 11 ரன்னில் வெளியேற, 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணியை ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் மீட்டெடுத்தனர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 79 ரன் மற்றும் அக்சார் பட்டேல் 42 ரன்கள் குவிக்க இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் குவிக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது. இதில் நியூசிலாந்து அணியின் மார்ட் ஹென்றி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி மாயாஜாலம்

அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் 6 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க வீரர் வில் யங் 22 ரன்னில் நடையை கட்டினார். இதற்கு பின்னர் களமிறங்கிய வில்லியம்சன் ஒரு முனையில் நிலைத்து நின்று போராட்டத்தை வெளிப்படுத்த மற்ற வீரர்கள் சூழ்நிலையை அறிந்து விளையாடாமல் இந்திய அணியின் பந்து வீச்சுக்கு இறையானார்கள். இதில் அதிகபட்சமாக கேப்டன் சான்ட்னர் 28 ரன்கள் எடுக்க வில்லியம்சன் 81 ரன்னில் அக்சார் பட்டேலின் பந்து வீச்சில் வெளியேறினார்.

இதையும் படிங்க:சிஎஸ்கேக்கு எதிரா செம்ம பிளான் இருக்கு.. பட்டிதாரை இதுக்குதான் கேப்டனாவே ஆக்கினோம் – தினேஷ் கார்த்திக் உடைக்கும் சீக்ரெட்

இறுதியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 45.3 ஓவர்களில் 205 ரன்கள் மட்டுமே எடுத்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதில் இந்த போட்டியில் வாய்ப்பு பெற்ற வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலமாக புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள இந்திய அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை வருகிற செவ்வாய்க்கிழமை துபாய் மைதானத்தில் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -