இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா இங்கிலாந்து முதல் ஒரு நாள்
பேட்டிங் செய்வதற்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இங்கிலாந்து அணியின் பில் சால்ட் மற்றும் டக்கெட் ஆகியோர் இங்கிலாந்து ரன் கணக்கை அதிரடியாக தொடங்கினார்கள். அதிலும் குறிப்பாக பில் சால்ட் அறிமுக வீரர் ஹர்சித் ராணாவின் ஒரே ஓவரில் 26 ரன்கள் குவித்தார். அப்போது எதிர்பாராத விதமாக 43 ரன்னில் ஸ்ரேயாஸ் ஐயரின் சிறப்பான ரன் அவுட் ஆல் வெளியேறினார்.
அதற்குப் பின்னர் டக்கெட் 32 ரன்னில் வெளியேற, இங்கிலாந்து அணி சரிவை நோக்கி சென்றது. ஜோ ரூட் 19 ரன் மற்றும் ஹாரி புரூக் டக் அவுட்டில் வெளியேற, ஜாஸ் பட்லர் மற்றும் ஜேக்கப் பெத்தல் ஆகியோர் இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து காப்பாற்ற முயற்சித்தனர். 87 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த நிலையில் பட்லர் 52 ரன்னில் வெளியேற, பெத்தல் 51 ரன்னில் நடையை கட்டினார். இதன் மூலமாக இங்கிலாந்து அணி 47.4 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் குவித்தது. பௌலிங்கில் ராணா மற்றும் ஜடேஜா ஆகியோர் 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.
துணை கேப்டன் அபார ஆட்டம்
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தனது முதல் போட்டியில் 15 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த துணை கேப்டன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி மூன்றாவது விக்கெட்டுக்கு 64 பந்துகளில் 94 ரன்கள் குவித்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 59 ரன்களில் வெளியேறினார்.
இதையும் படிங்க:6 பந்தில் 26 ரன்.. அப்போ ரோஹித் பையா இதைத்தான் சொன்னார்.. அதுதான் பெரிய ட்விஸ்ட் – ஹர்ஷித் ராணா பேட்டி
அதற்குப் பின்னர் கில் மற்றும் அக்சார் பட்டேல் கூட்டணி 108 ரன்கள் குவித்த நிலையில் அக்சார் பட்டேல் 51 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பிறகு இந்திய அணி சில விக்கெட்டுகளை இழந்தாலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுப்மான் கில் 96 பந்துகளில் 14 பவுண்டரியுடன் எதிர்பாராத விதமாக மகமூதின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஜோடி போட்டியை முடிக்க இந்திய அணி 38.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் குவித்து முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 2023 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்த 8 போட்டிகளில் 7 போட்டிகள் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.