இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனது முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு பெற்ற ஹர்சித்ராணா மூன்று முக்கிய விக்கட்டுகள் கைப்பற்றினார்.
ஒரே ஓவரில் 26 ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் அதற்குப் பின்னர் தான் மீண்டு வந்த விதம் குறித்து ஹர்ஷித்ராணா சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ஒரே ஓவரில் 26 ரன்
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நாக்பூரில் நடைபெற்று வரும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, தனது முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு பெற்ற ஹர்சித்ரானாவின் மூன்றாவது ஓவரில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் 3 சிக்ஸர் மற்றும் 2 பௌண்டரி என ஒரே ஓவரில் 26 ரன்கள் எடுத்தார்.
இது ஹர்சித் ராணா வுக்கு பந்துவீச்சில் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு 43 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த போது பில் சால்ட் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி வெளியேற, அதற்குப் பிறகு ஹர்சித்ராணா கையில் ரோஹித் சர்மா மீண்டும் பந்தை கொடுத்தார். தனக்கு கொடுக்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பைக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ஹர்ஷித்ராணா பென் டக்கட், ஹாரி புரூக் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகிய முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தார். அவர் அந்த சமயத்தில் ரோகித் சர்மா தன்னுடன் விவாதித்த விதம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
நானும் ரோகித்தும் இதைத்தான் விவாதித்தோம்
இது குறித்து ராணா கூறும் பொழுது
“முதலில் இந்த போட்டியில் நிலையான லென்த்தில் தொடர்ந்து பந்து வீச வேண்டும் என்பதே என்னுடைய முக்கிய நோக்கமாக இருந்தது. ஆரம்பத்தில் அவர்கள் என் பந்துவீச்சை தாக்கினார்கள். ஆனாலும் எனது நீளத்தில் நான் எந்த விதமான மாற்றத்தையும் செய்யவில்லை. இறுதியில் அதற்கான வெகுமதியும் எனக்கு கிடைத்தது. அவர்கள் அடிப்பதற்குத் தகுந்தவாறு பந்துகளில் இடைவெளியை தேடிக்கொண்டிருந்தார்கள்.
இதையும் படிங்க:600 விக்கெட்.. டாப் 5 ஜாம்பவான்கள் லிஸ்டில் ஜடேஜா.. இந்திய கிரிக்கெட்டில் படைத்த மகத்தான சாதனை.. முழு விவரம்
எனவே அவர்களுக்கு இடைவெளி கொடுக்கும் வகையில் பந்து வீசினால் தான் தாக்குவதற்கான ஒரே வாய்ப்பு என்பதை நானும் ரோஹித் பையாவும் விவாதித்தோம். எனவே முடிந்தவரை நான் இடைவெளி கொடுக்காமல் இறுக்கமான லென்த்தில் பந்து வீச வேண்டும் என்று ரோஹித் சர்மா விரும்பினார். அதையே நானும் முயற்சி செய்தேன். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது” என்று பேசி இருக்கிறார்.






