6 மெகா சாதனைகள்.. 3வது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இந்தியா சாதனை.. அகமதாபாத்தில் மாறிய வரலாறு

0
6
Surya

இன்று டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 96 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஏற்கனவே இந்த மைதானத்தில் முக்கிய போட்டிகளில் இந்திய அணி தோல்வி அடைந்திருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்தது.

- Advertisement -

இந்தியா ரன் குவிப்பு

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 7.1 ஓவரில் 98 ரன்கள் அதிரடியாக கிடைத்தது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 18 பந்தில் அரை சதம் அடித்து 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 89 ரன்கள் மற்றும் இஷான் கிஷான் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 54 ரன்கள் எடுத்தார்கள். இதைத்தொடர்ந்து கடைசி கட்டத்தில் சிவம் துபே ஆட்டம் இழக்காமல் 8 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உடன் 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. ஜிம்மி நீசம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இந்திய அணி சாம்பியன்

இதைத்தொடர்ந்து மெகா இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு பின் ஆலன் 9, டிம் சைய்பர்ட் 52, ரச்சின் ரவீந்தரா 1, கிளன் பிலிப்ஸ் 5, மார்க் சாப்மேன் 3, டேரில் மிட்சல் 17, சான்ட்னர் 45 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா 96 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் ஆனது. பும்ரா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : அகமதாபாத்தில் நடந்ததெல்லாம் வரலாறு.. ஆனா இன்னைக்கு நாங்க செய்யப் போறது புதுசு – சூரியகுமார் உறுதி

இந்திய அணி மூன்று டி20 உலகக் கோப்பைகளை வென்ற ஒரே அணியாகவும், தொடர்ந்து இரண்டு முறை டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணியாகவும், சொந்த மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்ற முதல் அணியாகவும், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக ரன் எடுத்த அணியாகவும், மேலும் சஞ்சு சாம்சங் டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரராகவும் என பல சாதனைகளை இந்திய அணியும் வீரர்களும் படைத்திருக்கிறார்கள்.

- Advertisement -