டி20 உலகக் கோப்பை 2024

சூரியகுமார் ஷிவம் துபே பொறுப்பான ஆட்டம்.. அமெரிக்க அணியை வீழ்த்திய இந்தியா.. அடுத்த சுற்றுக்கு தகுதி

நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி மற்றும் அமெரிக்க அணிகள் பேட்டிங் செய்வதற்கு கடினமான நியூயார்க் மைதானத்தில் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சூரியகுமார் மற்றும் சிவம் துபே பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டிக்கான டார்சில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தார். இந்திய அணிக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே அர்ஸ்தீப் சிங் விக்கெட் கைப்பற்றினார். மேலும் அதே ஓவரில் மற்றுமொரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

அமெரிக்க அணிக்கு ஸ்டீவன் டெய்லர் 27 பந்தில் 24 ரன்கள், நிதீஷ் குமார் 23 பந்தில் 27 ரன்கள், கோரி ஆண்டர்சன் 12 பந்தில் 15 ரன்கள் எடுக்க, அமெரிக்கா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்தது. அர்ஸ்தீப் சிங் நான்கு ஓவர்களில் ஒன்பது ரன்கள் மட்டுமே தந்து நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு விராட் கோலி கோல்டன் டக் ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்து ரோஹித் சர்மா 6 பந்தில் 3 ரன்கள், ரிஷப் பண்ட் 20 பந்தில் 18 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதனால் இந்திய அணிக்கு திடீரென நெருக்கடி உண்டானது.

- Advertisement -

இந்த நிலையில் சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே இருவரும் ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். இறுதியில் இந்திய அணியை இந்த ஜோடி 18.2 ஓவர்களில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தது. சூரியகுமார் யாதவ் 49 பந்துகளில் 50 ரன்கள், சிவம் துபே 35 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்கள்.

இதையும் படிங்க : இந்தியா அமெரிக்கா போட்டி.. அர்ஸ்தீப் சிங் முதல் பவுலராக அசத்தல் சாதனை.. அஸ்வின் ரெக்கார்டு முறியடிப்பு

இன்றைய வெற்றியின் மூலமாக இந்திய அணி ஏ பிரிவில் இருந்து முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. அமெரிக்க அணி தன்னுடைய கடைசி ஆட்டத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டும், இல்லையென்றால் போட்டி மழையால் கைவிடப்பட்டால் அடுத்த சுற்றுக்கு முன்னேறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by