இந்திய கிரிக்கெட்

வெறும் 11 ஓவர்.. 10 விக்கெட்.. ஸ்மிருதி பூஜா அசத்தல் ஆட்டம்.. தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி

மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியுள்ளது.

- Advertisement -

தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் விளையாடி வருகிறது.

ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும், இரண்டாவது போட்டி மழையால் பாதிக்கப்பட்டு நடக்காமல் போக, மூன்றாவது போட்டி சிதம்பரம் ஸ்டேடியத்தில் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி பேட்டிங் தொடங்கிய தென்னாப்பிரிக்க மகளிர் அணி 19 ரன்களில் தனது முதல் விக்கெட் பறிகொடுத்தது. அதற்குப் பின்னர் முப்பதாவது ரன்னில் இரண்டாவது விக்கெட் போக, பிறகு தென்னாப்பிரிக்கா அணியின் வீழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிய தென்னாப்பிரிக்க அணி 84 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக தென்னாப்பிரிக்க அணியில் டாஸ்மின் பிரிட்ஸ் 20 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தென்னாபிரிக்க அணியில் எட்டு பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணியில் பூஜா வஸ்ட்ரக்கார் 3.1 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் ராதா யாதவ் மூன்று ஓவர்களில் ஒரு ஓவர் மெய்டனுடன் ஆறு ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கிய இந்திய மகளிர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான செபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் கடைசி வரை நின்று ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர். செபாலி வர்மா 25 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 27 ரன்களும், மந்தனா 40 பந்துகளை எதிர்கொண்டு எட்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 54 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க:210 ரன்.. பெல் சூறாவளி பேட்டிங்.. சொல்லி அடித்த சமியின் வெஸ்ட் இண்டீஸ்.. இங்கிலாந்து சாம்பியன்ஸ் தோல்வி

இதனால் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது டி20 தொடரை சமநிலையில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று வந்த நிலையில் தற்போது இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை சமநிலைப்படுத்தி உள்ளது. பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் பூஜா ஆட்டநாயகன் விருதையும் தொடர் நாயகன் விருதையும் வென்றிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts