இங்கிலாந்தில் கடந்த வாரம் தொடங்கி முன்னாள் வீரர்கள் பங்கு பெற்று விளையாடும் உலக லெஜன்ட்ஸ் சாம்பியன்ஷிப் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று இங்கிலாந்து சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் தன்னுடைய ஸ்டைலில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் டேரன் சமி தங்கள் அணி முதலில் பந்து வீசும் என அறிவித்தார். இந்த தொடர் முழுக்க சொதப்பி வரும் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி இந்த முறை சுதாரித்து விளையாடி வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிக்கு பேட்டிங்கில் மிகப்பெரிய நெருக்கடியை உண்டாக்கியது.
இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணிக்கு கேப்டன் மற்றும் துவக்க ஆட்டக்காரர் கெவின் பீட்டர்சன் 19 பந்துகளில் 42 ரன்கள், இயான் பெல் அதிரடியாக 64 பந்துகளில் 97 ரன்கள், ரவி போபரா 30 பந்தில் 53 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் இங்கிலாந்து சாம்பியன்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் தரப்பில் ஆஸ்லே நர்ஸ் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து பெரிய இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிக்கு அதிரடி ஆட்டக்காரர்கள் டிவேன் ஸ்மித் மற்றும் கிரீஸ் கெயில் இருவரும் இந்த முறை ஏமாற்றம் தந்தார்கள். இருவரும் 11 மற்றும் 1 ரன்னில் வெளியேறினார்கள். எனவே இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணி வெல்வது கடினம் என்று சூழ்நிலை இருந்தது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஷாட்விக் வால்டன் தனி ஆளாக நின்று ஆரம்பத்தில் ஆட்டத்தை மாற்றி 42 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார். இவர் கொடுத்த தொடக்கத்தை அப்படியே எடுத்த ஜேசன் முகமது 24 பந்தில் 32 ரன், ஆஸ்லே நர்ஸ் ஆட்டம் இழக்காமல் 25 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : 1.4 பில்லியன் மக்களுக்காக.. கண்டிப்பா இந்திய டீம்ல இதை செய்வேன் – புது கோச் கம்பீர் உறுதி
வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19.3 ஓவரில் 210 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வழக்கமான வெஸ்ட் இண்டீஸ் அணிபோலவே இந்த அணியும் எவ்வளவு பெரிய இலக்காக இருந்தாலும் திருப்பி அடிப்பதை பார்க்க நன்றாகஇருக்கிறது.






