இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஆஸ்திரேலிய அணியை தேர்வு செய்யும் பொழுது ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் எப்படியான தாக்கத்தை செலுத்தினார்கள்? என்பது குறித்து தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியிருக்கிறார்.
இந்த மாத இறுதியில் இலங்கை அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா அணி ஸ்மித் தலைமையில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கிறது. ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ் காயம் காரணமாக இந்த தொடரில் இடம் பெறவில்லை.
ஜடேஜா – அக்சர் படேல் செலுத்தும் தாக்கம்
இந்திய டெஸ்ட் அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் என இரண்டு இடது கை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் இடம்பெறுகிறார்கள். ஒரே மாதிரி பேட்டிங் மற்றும் பந்து வைத்து இரண்டையும் செய்யக்கூடிய இவர்கள் சில நேரங்களில் ஒரே நேரத்தில் பிளேயிங் லெவனிலும் இடம் பெறுகிறார்கள். இது இந்திய அணிக்கு நல்ல தாக்கத்தை கொடுத்து வருவதாகவும் இருக்கிறது.
இந்த நிலையில் இவர்களை பின்பற்றி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடது கை சுழல் பந்துவீச்சாளர் குஹ்னமேன் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்று இருந்த பொழுதும், இன்னொரு இடது கை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் அன்கேப்டு வீரர் கூப்பர் கன்னொலியை தற்போதைய தற்காலிக கேப்டன் ஸ்மித் தேர்வு செய்திருக்கிறார்.
அவரை தேர்வு செய்ய இதுவே காரணம்
இதுகுறித்து பேசி இருக்கும் ஸ்டீவ் ஸ்மித் கூறும் பொழுது “நான் இது குறித்து அணியின் பயிற்சியாளர் மற்றும் அணி தேர்வாளர் இருவரிடமும் பேசினேன். கூப்பர் போன்ற ஒருவர் அணிக்குள் வருவதை நான் விரும்பினேன். அவரால் பந்தை வெவ்வேறு வழிகளில் சுழற்ற முடியும்”
இதையும் படிங்க : விராட் கோலி ஐபிஎல்-லை விட்டு.. நாட்டுக்காக அதை செய்வார்னு கனவு காணாதீங்க – ஆகாஷ் சோப்ரா விளக்கம்
“நீங்கள் இந்தியாவை எடுத்துக் கொள்ளும் பொழுது ஜடேஜா, அக்சர் படேல் என ஒரே மாதிரி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு செய்யும் இருவர் இருக்கிறார்கள். ஒரு சுழல் பந்துவீச்சாளர் சோர்வடையும் பொழுதோ அல்லது அவரால் எதுவும் செய்ய முடியாத பொழுதோ அவரைப் போன்ற இன்னொருவரை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த காரணத்தினால் நான் கூப்பரை தேர்வு செய்ய விரும்பினேன். அவர் நல்ல திறமை கொண்ட இளம் வீரர்” என்று தெரிவித்திருக்கிறார்.