U19 மகளிர் டி20 உலக கோப்பை பைனல்.. எந்த சேனலில் பார்க்கலாம்.?. போட்டி தொடங்கும் நேரம்.. முழு விவரம்

0
68

மகளிருக்கான அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. மலேசியாவில் நடைபெற்று வரும் இந்த தொடரில் இரு அணிகளும் ஒரு போட்டியில் கூட தோல்வியே  தழுவாமல் ஃபைனலுக்கு வந்திருக்கிறார்கள்.

இந்திய அணியை பொறுத்தவரை அரை இறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எளிதில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் இங்கிலாந்தை 113 ரன்களில் இந்திய அணி சுருட்டியது. இதை அடுத்து பேட்டிங்கில் இந்திய வீராங்கனைகள் காமலினி 56 ரன்களும், திரிஷா 35 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

சாதிக்குமா தென்னாப்பிரிக்க அணி:

தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தி தற்போது பைனலுக்கு வந்திருக்கிறது. எனினும் அரையிறுதியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 106 ரன்கள் என்ற இலக்கை தட்டு தடுமாறி தான் தென்னாப்பிரிக்கா அணி எட்டி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த சூழலில் சம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஆடவர் சீனியர் டி20 உலக கோப்பையில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா அணியும் பைனலில் மோதியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது.

- Advertisement -

தற்போது தங்களது ஆடவர் சீனியர் அணியால் செய்ய முடியாத காரியத்தை ஜூனியர் மகளிர் அணி செய்து முடிக்க வேண்டிய உத்வேகத்தில் களமிறங்குகிறது. இந்தத் தொடரில் இந்திய அடித்த மொத்த ரன்களில் 75% காமினியும், திரிஷாவும் மட்டும்தான் அடித்திருக்கிறார்கள்.

அதற்குப் பிறகு சனிக்கா மட்டும் தான் 20 பந்துகளை எதிர்கொண்டு இருக்கிறார். இதனால் நடுவரிசை வீராங்கனைகள் இந்த தொடரில் பெரிய அளவு விளையாடாதது ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

எந்த சேனல், ஒடிடி அணி விவரம்:

இந்தியாவும் தென்னாபிரிக்காவும் மோதும் இந்த போட்டி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல் கண்டு களிக்கலாம் ஒடிடியில் ஹாட்ஸ்டார் இல் பார்க்கலாம்.

இந்தியா: நிகி பிரசாத் (கேப்டன்), சானிகா சால்கே, ஜி த்ரிஷா, கமாலினி ஜி, பவிகா அஹிரே, ஈஸ்வரி அவசரே, மிதிலா வினோத், ஜோஷிதா விஜே, சோனம் யாதவ், பருணிகா சிசோடியா, கேசரி த்ரிதி, ஆயுஷி சுக்லா, ஆனந்திதா கிஷோர், எம்.டி. ஷப்னம், வைஸ்னவி சர்மா

தென்னாப்பிரிக்கா: ஜெம்மா போத்தா, சிமோன் லூரன்ஸ், ஃபே கௌலிங், கெய்லா ரெய்னேக் (கேப்டன்), கராபோ மெசோ ,மைக் வான் வூர்ஸ்ட், செஷ்னி நாயுடு, லுயாண்டா நசுசா, ஆஷ்லே வான் வைக், மோனாலிசா லெகோடி, நதாபிசெங் நினி, டியாரா ராம்லகான், ஜே லீக் ஃபிலகான் ,ரென்ஸ்பர்க், வெண்டர்

- Advertisement -