இந்தியா உலக கோப்பையை கட்டாயம் ஜெயிக்கும்.. 5 முக்கியமான காரணங்கள்!

0
1712

இந்திய அணி 13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோல்வி அடையாத அணியாக இருந்து வருகிறது.

தற்பொழுது லீக் சுற்றில் தொடர்ச்சியாக ஒன்பது ஆட்டங்கள் மற்றும் அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு ஆட்டம் என மொத்தம் பத்து ஆட்டங்களை இந்திய அணி வென்று இருக்கிறது. புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வந்த இந்திய அணி இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை சந்தித்து விளையாடுகிறது

- Advertisement -

ஐந்து முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணியை வெல்வது சுலபம் கிடையாது. ஆனால் இந்திய அணி கட்டாயம் உலக கோப்பையை வெல்வதற்கான ஐந்துமுக்கிய காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்ப்போம்!

இன்பார்ம் பேட்டிங் :

இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஏழு வரை மட்டுமே உள்ளது. ஆனால் இந்த ஏழு பேட்ஸ்மேன்களும் தற்பொழுது நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள். குறிப்பாக முதல் ஐந்து இடங்களில் வரும் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார்கள்.

- Advertisement -

இன்பார்ம் பவுலிங் :

இந்திய அணியில் ஆறாவது பந்துவீச்சாளர் என்பது கிடையாதுதான். ஆனால் ஐந்து பந்துவீச்சாளர்களும் உலகத் தரமானவர்கள். அவர்கள் ஐந்து பேருமே சிறப்பான பவுலிங் செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். முகமது சமி அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இந்த உலகக் கோப்பையில் இருக்கிறார்.

அச்சமற்ற கிரிக்கெட் :

இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் அச்சமற்ற முறையில் தைரியமாக விளையாடுவதை பாணியாகக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணிக்கு மிகச்சிறந்த துவக்கம் கிடைக்கிறது. இதற்கு மிக முக்கியமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இருந்து வருகிறார்.

சொந்த நாட்டில் விளையாடுவது :

இந்திய அணி இந்தியாவில் விளையாடுவதால் வெவ்வேறு மைதானங்களில் விளையாடினாலும், வெவ்வேறு மைதானங்களில் சூழலுக்கு உடனடியாக பழகக் கூடியவர்களாக, புரிந்து செயல்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இது ஆட்டத்தை எடுத்ததும் சிறப்பாகத் துவங்க உதவுகிறது.

இந்திய அணியின் சிந்தனைக்குழு :

நடப்பு உலக கோப்பையில் இந்திய அணி களத்திற்கு வெளியே எடுக்கும் முடிவுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது. எல்லா வீரர்களுக்கும் தெளிவான ரோல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் களத்தில் சூழலுக்கு என்ன தேவையோ, அவை வெளியே இருந்து முடிவெடுக்கப்பட்டு உடனுக்குடன் உள்ளே தெரிவிக்கப்படுகிறது. இதனால் வீரர்கள் ஆட்ட சூழலை புரிந்து அதற்கு ஏற்றவாறு சந்தேகம் இல்லாமல் விளையாடுகிறார்கள்.

இப்படி ஒரு அணிக்கு மிக முக்கியமான எல்லா விஷயங்களும் மிகச் சரியாக இருக்கும் பொழுது, அந்த அணி ஒரு தொடரை வெல்லாவிட்டால்தான் ஆச்சரியப்பட வேண்டும். இந்திய அணி இந்த உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு மிக அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது!