ரொம்ப சந்தோசப்படாதிங்க, இந்தியா செமி-பைனல் தாண்டது – சோயிப் அக்தர் கருத்து!

0
17566

இந்திய அணி அரை இறுதி போட்டியுடன் உலக கோப்பையில் இருந்து வெளியேறும் என்று கருத்து தெரிவித்துள்ளார் சோயிப் பக்தர்.

டி20 உலக கோப்பையை இந்திய அணி மிகச் சிறப்பாக துவங்கி இருக்கிறது. சூப்பர் 12 சுற்றில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்று புள்ளிபட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

அடுத்து வரும் தென்னாபிரிக்க அணியுடன் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் நிச்சயம் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும். இந்திய அணி இம்முறை அரையிறுதி போட்டிக்கு செல்லும் அணிகளில் ஒன்றாக நிச்சயம் இருக்கும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதே குரூப்பில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் அணி, முதல் போட்டியில் இந்தியாவுடனும் இரண்டாவது போட்டியில் துரதிஷ்டவசமாக ஜிம்பாப்வே அணியுடன் ஒரு ரன் வித்தியாசத்திலும் தோல்வியை தழுவி புள்ளிபட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கிறது.

இன்னும் ஒரு தோல்வியை பாகிஸ்தான் அணி பெறும் பட்சத்தில் உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற நேரிடும்.

- Advertisement -

பாகிஸ்தான் அணி நிச்சயம் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறாது என்று தனது கணிப்பில் தெரிவித்து இருக்கிறார் சோயிப் அக்தர். அதே நேரம் இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறும் என்றும் தனது கணிப்பில் தெரிவித்து இருப்பது இந்திய ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. அவர் கூறுகையில்,

“நான் முன்னமே பலமுறை தெரிவித்து இருக்கிறேன் ஜிம்பாப்வே அணியுடன் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவினால் நிச்சயம் சூப்பர் 12 சுற்றுடன் உலக கோப்பையில் இருந்து வெளியேறிவிடும்.

அதே நேரம் இந்திய ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியடைய வேண்டாம். அரையிறுதி போட்டியுடன் இந்தியா உலக கோப்பையில் இருந்து வெளியேறும். ஏனெனில் இந்திய அணி வீழ்த்த முடியாத அணி ஒன்றும் இல்லை. எளிதாக வீழ்த்தக்கூடிய அளவிற்கு பல்வேறு தவறுகள் இந்திய அணியிடம் இருக்கின்றன.

பாகிஸ்தான் அணியின் அடுத்த அடுத்த தோல்விக்கு முக்கிய காரணம், தகுதியான வீரர்களை அணியில் எடுக்காதது தான். என்னைப்போன்று பாகிஸ்தான் ஜாம்பவான்கள் பலரும் இதனை எடுத்துச் சொல்லியும் அணி நிர்வாகம் கருத்தில் கொள்ளவில்லை. தற்போது தோல்வியை அனுபவிக்கிறார்கள்.” என்றார்.