இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தனர். தற்போது டெஸ்ட் போட்டிகள் எல்லாம் மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிவடைந்து விடுகிறது. இந்த சூழலில் விராட் கோலி, ரோஹித் சர்மா, புஜாரா, ரஹானே போன்ற அனுபவ வீரர்கள் இல்லாமல் களம் இறங்கும் இந்திய அணி லீட்ஸ் டெஸ்டில் என்ன செய்து விடப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஆகியோர் அதிரடியாக விளையாடி சதம் விளாசினர். இந்த நிலையில் 359 ரன்களுக்கு மூன்று விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிது. இதனால் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் தன்னுடைய சதத்தை பூர்த்தி செய்தார்.
விக்கெட்டுகள இழந்த இந்தியா:
மறுபுறம் கேப்டன் கில் 147 ரன்களில் ஆட்டம் இழ்ந்தார். இந்த ஜோடி 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது. இந்த தருணத்தில் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பிய கருண் நாயர் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் டக் அவுட் ஆனார்.
இதேபோன்று சர்துல் 1 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் இரண்டாவது நாள் முதல் செஷனில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை கொத்தாக இழந்தது. இதன் காரணமாக முதல் இன்னிங்சில் 600 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 454 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து இருக்கிறது.
மாறிய ஆடுகளம்?
ரன் குவிப்புக்கு சாதகமாக இருந்த இந்த மைதானத்தில் 24 ரன்கள் இடைவெளியில் நான்கு விக்கட்டுகளை எப்படி இந்தியா இழந்தது என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர்.அதற்குக் காரணம் வானம் மேகமூட்டமாக மாறியதுதான். இங்கிலாந்தில் எப்போதெல்லாம் வானம் மேகமூட்டமாக இருக்கிறதோ அப்போதெல்லாம் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆகும். இதை எதிர்பார்த்து தான் இங்கிலாந்து அணி நேற்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்.. ரிஷப் பண்ட் அபார சதம்.. தோனியின் ரெக்கார்ட் முறியடிப்பு
ஆனால் நல்வாய்ப்பாக நேற்று வெயில் அடித்ததால் இந்திய அணி வீரர்கள் நன்றாக விளையாடினர். ஆனால் தற்போது பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனவுடன் இந்திய அணி வீரர்கள் தடுமாற தொடங்கினர். குறிப்பாக பந்து ஸ்விங் ஆவதை கணிக்க தவறிய வீரர்கள் பண்ட், கில் அதிரடியாக தான் விளையாடினார்கள். நாமும் அதே போல் அதிரடி காட்டுவோம் என்ற தவறான எண்ணத்தில் சில தவறான ஷாட்களை ஆடினர்.பந்து ஸ்விங் ஆகிறது என கொஞ்சம் பொறுமை காத்திருந்து இன்று மாலை வரை விளையாடி இருந்தால் நிச்சயம் 600 ரன்களுக்கு மேல் குவித்திருக்க முடியும்.






