இந்திய அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் t20 தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் அபார வெற்றியை பெற்றிருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ஒரு நாள் தொடர் வரும் ஆறாம் தேதி வியாழக்கிழமை நாக்பூரில் நடைபெறுகிறது. டி20 தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் பங்கேற்ற நிலையில் ஒருநாள் அணியில் ரோகித் சர்மா தலைமையில் ஸ்டார் வீரர்கள்
பங்கேற்கிறார்கள்.
2024 ஆம் ஆண்டு இந்திய அணி மூன்றே மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தான் இலங்கைக்கு எதிராக விளையாடியது. இதில் இந்திய அணி 2 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் டிராவும் கண்டது. இந்த நிலையில் 2023 உலகக்கோப்பை அரை இறுதி போட்டிக்கு பின் இந்திய அணி எந்த ஒரு நாள் போட்டிகளும் வெற்றி பெறவில்லை.
இதனால் இங்கிலாந்து தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கும் முன்பு இந்த தொடர் நடைபெறுவதால், இது நல்ல ஒரு பயிற்சியாக பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதேபோன்று ஸ்ரேயாஸ், முகமது சமி, ராகுல் போன்ற வீரர்கள் இந்த தொடரில் விளையாடுகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிராக டி20 தொடரில் இடம் பிடித்த ஆறு வீரர்கள் ஒரு நாள் அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்கள். முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதியும், இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9ஆம் தேதியும்,மூன்றாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 12ஆம் தேதியும் நடைபெறும்.
இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் பார்க்கலாம். டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி நேரலையில் செய்யப்படுகிறது.
இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா(3வது போட்டிக்கு மட்டும்), முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜடேஜா, ரிஷப் பந்த்,
இங்கிலாந்து அணி விவரம்: ஹாரி புரூக், பென் டக்கெட், ஜோ ரூட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், ஜோஸ் பட்லர், ஜேமி ஸ்மித், பிலிப் சால்ட், ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மார்க் வுட்