இந்தியா-இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் முக்கியமான பவுலராக திகழ்வார் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20 அன்று லீட்ஸில் உள்ள ஹெடிங்லியில் தொடங்குகிறது.
அஸ்வின் ஓய்வு பெற்ற பிறகு, குல்தீப் யாதவ் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடிக்கடி இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணியில் ஒரே ஸ்பொலிஸ்ட் சுழற்பந்து வீச்சாளராக உள்ளார், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களாக உள்ளனர்.
லெக் ஸ்பின்னரான குல்தீப், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இந்தியாவின் முக்கிய ஆயுதமாக இருக்கலாம் என்று ஹைடன் கூறினார். இது குறித்து பேசிய அவர், “முன்னோக்கிப் பார்க்கும்போது, இந்தியா இங்கிலாந்துக்கு என்ன கொண்டு வருகிறது என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
ஐந்து டெஸ்ட் போட்டிகள், இது ஒரு கடினமான, வீரர்களின் தன்மையை சோதிக்கும் தொடர். முன்பு நாங்கள் இதைப் பற்றி விவாதித்தோம், குல்தீப் யாதவ் போன்ற ஒருவர் அவர்களுக்கு 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் முக்கிய பந்து வீச்சாளராக இருக்கலாம்,” என்று ஹைடன் தெரிவித்தார்.
ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளரின் இருப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று கூறினார். 2023 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா, நாதன் லயனின் பங்களிப்பை இழந்ததை அவர் சுட்டிக்காட்டினார். அனுபவமிக்க ஆஃப்-ஸ்பின்னர் ஆன லயான், இரண்டாவது டெஸ்டில் காயமடைந்து, மீதமுள்ள தொடரை தவறவிட்டார்.
சுழற்பந்துவீச்சாளரின் முக்கியத்துவம்:
ஆஸ்திரேலியா முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. ஆனால், லயன் இல்லாததால், கடைசி மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து, தொடர் 2-2 என சமனில் முடிந்தது.
“லயனின் நிலையான பங்களிப்பு எங்களுக்கு பலனளித்தது, கடந்த ஆஷஸில் அவரது இல்லாதது பெரிய இழப்பாக அமைந்தது”
எல்லா காலகட்டங்களிலும் சிறந்த அணிகளுக்கு ஒரு பொதுவான அம்சம் உள்ளது, அது நிலைத்தன்மை,” என்று ஹைடன் கூறினார்.இந்தியா-இங்கிலாந்து மோதலுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஜூன் 11, புதன்கிழமை லார்ட்ஸில் மோதவுள்ளனர்.
ஆஸி அணியின் பலம்:
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “எங்களிடம் இன்னும் சிறந்த வீரர்கள் அடங்கிய பேட்டிங் குழு உள்ளது, ஆனால் சில வகைகளில் மாற்றங்கள் தொடங்கிவிட்டன. ஸ்டீவ் ஸ்மித் அல்லது உஸ்மான் கவாஜா எவ்வளவு காலம் தொடருவார்கள்? இவர்கள், நானும் ஸ்டீவ் வாக்கும், விராட்டும் இருந்த இடத்தில் உள்ளனர். ஒரு கட்டத்தில் எதிர்காலத்தை நோக்கி முன்னேற வேண்டிய நேரம் வரும் என்று உணர்கிறோம்,” என்று ஹைடன் கூறினார்.
இதையும் படிங்க: பும்ரா தான் என் ரோல் மாடல்.. அவரை காப்பி அடிப்பேன்..உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் குறித்து ஆஸி. வீரர் கிரீன் கருத்து
“ஆனால் தற்போதைய கட்டத்தில், ஆஸ்திரேலியா மிகவும் ஆதிக்கம் செலுத்திய அணியாக உள்ளது. ஒரு டெஸ்டை வெல்ல 20 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும், இந்த அணியிடம் ஸ்டீவ் வாக் காலத்தில் இருந்தது போல உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து மும்மூர்த்திகள் உள்ளனர். மேலும், உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளராக நாதன் லயனின் திறமையை நாம் அனைவரும் பாராட்டுகிறோம். இது ஆஸ்திரேலிய அணியின் பலத்துக்கு முக்கிய அங்கமாக உள்ளது,” என்று ஹைடன் கூறினார்.






