சென்னை டி20.. இந்தியா இங்கிலாந்து மேட்ச் டிக்கெட் எப்படி வாங்குவது.?. விலை எவ்வளவு.?. முழு விபரம்

0
162
India vs England 2nd T20I

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. எங்களது அணியில் 11 வீரர்களுக்குமே பேட்டிங் தெரியும் என இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியிருந்ததார்.

இதனால், மிகப்பெரிய ரன் விருந்து நிகழப் போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இங்கிலாந்து அணி இந்தியாவின் சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 132 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க இந்திய அணி 12 புள்ளி 5 ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

- Advertisement -

இதனால் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இந்த சூழலில் இரு அணிகளும் வரும் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுகிறார்கள். சேப்பாக்கம் மைதானமும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்த போட்டி மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறது.

இதன் காரணமாக சேப்பாக்கம் மைதானத்தில் போட்டியை கண்டு களிப்பதற்கான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை மற்றும் ரசிகர்களுக்கான விதிமுறைகளை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்திருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.

- Advertisement -

டிக்கெட் விலை மற்றும் எங்கு வாங்கலாம்

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டிக்கான டிக்கெட் விற்பனை டிஸ்ட்ரிக்ட் ( District by zomato) என்ற மொபைல் ஆப்பிலும் இணையத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிக்கான குறைந்த பட்ச டிக்கெட் 1500 ரூபாயும் அதிகபட்ச டிக்கெட் 12,000 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று டிஜிட்டல் கேமரா, லேப்டாப், பவர் பேங்க்,ட்ரோன்ஸ் டேப்லெட் உள்ளிட்ட எந்த மின்சாதன பொருட்களையும் கொண்டு செல்ல அனுமதி அளிக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும் மொபைல் போன் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதேபோன்று ஹெல்மெட்,லேப்டாப், பேக் குடை மற்றும் எந்த ஒரு பேக்கும் மைதானத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

ரசிகர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு

இதேபோன்று டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கேட்டில் மட்டும்தான் ரசிகர்கள் வர அனுமதிக்கப்படுவார்கள். நான்கு சக்கரம் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி கலைவாணர் அரங்கம், சேப்பாக் ரயில்வே கார் பார்க்கிங் மற்றும் விக்டோரியா ஹாஸ்டல் மற்றும் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நிறுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க: வருண் சக்கரவர்த்தி ரஷித் கானை விட பெஸ்ட்.. அதற்கான காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

இதேபோன்று ரசிகர்களுக்கு இலவசமாக குடிநீர் வசதி மைதானம் முழுவதும் ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிலிருந்து வாங்கிக் கொண்டுவரப்படும் உணவுகளுக்கும் தடை விதித்திருக்கிறது.

- Advertisement -