இந்தியா பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான வானிலை அறிக்கை மற்றும் ஆடுகளம், மைதான புள்ளி விபரங்களை பார்க்கலாம்.
இந்திய அணி முதல் போட்டிக்கு களம் இறக்கிய பிளேயிங் லெவனில் எந்தவித மாற்றத்தையும் செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது போட்டியை வென்றால் மீதம் இருப்பவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். அதேபோல பங்களாதேஷ் அணிலும் மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று நம்பப்படுகிறது.
இந்தியா – பங்களாதேஷ் அணிகள் நேருக்கு நேர் மோதல்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா பங்களாதேஷ் அணிகள் இதுவரை 13 முறை மதிய இருக்கின்றன. இதில் இந்திய அணி 12 முறை வெற்றி பெற்று இருக்கிறது. ஒரே ஒரு முறை மட்டுமே பங்களாதேஷ் அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது.
அதே சமயத்தில் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இதுவரையில் 7 டி20 சர்வதேச போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இதில் மூன்று முறை முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்று இருக்கிறது. இந்த மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் மிகவும் சிறியவை. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய அதிகம் வாய்ப்புகள் உள்ளது.
ஆடுகளம் மற்றும் வானிலை தகவல்கள்
இந்த மைதானத்தின் ஆடுகளம் மிகவும் வறண்டதாக பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருக்கும். மேலும் சிறிய மைதானம் என்பதால் ரன்கள் நிறைய அளவில் செல்லும். அதே சமயத்தில் இங்கு முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 165 என்று இதுவரையிலான புள்ளி விபரங்கள் கூறுகிறது.
இதையும் படிங்க : மகளிர் டி20 உலக கோப்பை.. நியூசி ஆஸி போட்டி.. இந்திய அணி செமி பைனலுக்கு போக என்ன நடக்க வேண்டும்? – முழு அலசல்
மிக முக்கியமாக இந்த போட்டிக்கான வானிலையில் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லை. பகலில் வெப்பமாகவும் இரவில் சூடாகவும் இருக்கும் என்று வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. எனவே இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 40 ஓவர்களும் முழுமையான டி20 போட்டி கிடைக்க இருக்கிறது. தற்போதைய செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.






