இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் அறிவிப்பு.. 5டி20, 3 ஒருநாள் போட்டி அட்டவணை அறிவிப்பு.. எப்போது?

0
18

நடப்பாண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டது.  இந்த சூழலில் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த தொடருக்கான அட்டவணை விவரத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தற்போது அறிவித்திருக்கிறது. அக்டோபர் 19ஆம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

- Advertisement -

ஒருநாள் போட்டிக்கான அட்டவணை:

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத் தலைமை நிர்வாகி நிக் ஹாக்லி, கடந்த முறை இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது அதிக அளவுலான பார்வையாளர்கள் இந்த போட்டிகளை வந்து பார்த்தார்கள்.

மேலும் டிவி டிஆர்பி மற்றும் டிஜிட்டல் முறையில் அதிக ரசிகர்கள் இந்த போட்டியை பார்த்தார்கள். தற்போது மீண்டும் ஒரு சிறப்பான கிரிக்கெட் சீசன் நடைபெற இருப்பதை நினைத்து நாங்கள் ஆர்வமாக இருக்கின்றோம் என்று கூறியுள்ளார். அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் முதல் ஒருநாள் போட்டியும், அக்டோபர் 23ஆம் தேதி அடிலெய்டில் இரண்டாவது ஒருநாள் போட்டியும், அக்டோபர் 25ஆம் தேதி சிட்னியில் மூன்றாவது ஒருநாள் போட்டியும் நடைபெறுகிறது.

- Advertisement -

5 டி20 போட்டி அட்டவணை:

இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் அக்டோபர் 29ஆம் தேதி கேன்பேராவில் முதல் டி20 போட்டியும், அக்டோபர் 31ஆம் தேதி மெல்போர்னில் இரண்டாவது டி20 போட்டியும், நவம்பர் 2ஆம் தேதி ஹார்போட்டில் மூன்றாவது t20 போட்டியும், நவம்பர் 6ஆம் தேதி கோல்ட் கோஸ்டில் நான்காவது டி20 போட்டியிலும், நவம்பர் 8ஆம் தேதி பிரிஸ்பேனில் ஐந்தாவது டி20 போட்டியும் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. எங்களுக்கு பயம் கிடையாது.. சிஎஸ்கே போட்டிக்கு முன்பு ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் டிராவிட் கருத்து

இதன்பிறகு 2026 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட வருகிறது. 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணையும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -