இந்திய கிரிக்கெட்

31 பந்து 277 ஸ்ட்ரைக் ரேட்.. மீண்டும் சூரியவன்சி ருத்ர தாண்டவம்.. இங்கிலாந்து படுதோல்வி.. இந்திய U19 அணி வெற்றி

தற்போது இந்திய அண்டர் 19 அணி ஆயுஸ் மத்ரே தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் வைபவ் சூரியவன்சி அதிரடியில் எளிதான வெற்றியை பெற்றது.

- Advertisement -

மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்று தொடர் தற்காலிகமாக சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இங்கிலாந்து அதிரடி

முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் டவுகின்ஸ் சிறப்பாக விளையாடி 61 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் இஷாக் முகமத் 43 பந்தில் 41 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து மிடில் வரிசையில் கேப்டன் தாமஸ் ரேவ் 44 பந்துகளில் அதிரடியாக 76 ரன்கள் குவித்தார்.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 40 ஓவர் போட்டியாக நடைபெற்றதில் ஆறு விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தரப்பில் கனிஷ்க் சௌகான் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

சூரியவன்சி ருத்ர தாண்டவம்

மேலும் இந்த போட்டியில் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஆயுஸ் மத்ரே விளையாடாததால் விக்கெட் கீப்பர் அபிகியான் குந்து தொடக்க ஆட்டக்காரராக வந்து 11 பந்தில் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் ஒருமுனையில் நின்ற வைபவ் சூரியவன்சி ருத்ரதாண்டவம் ஆடினார். அவரை இங்கிலாந்து பவுலர்களால் கட்டுப்படுத்தவே முடியவில்லை.

இதையும் படிங்க : இப்படி செய்றது தப்பு.. திறமையான பையனின் தன்னம்பிக்கையை உடைக்காதீங்க.. முன்னாள் இந்திய வீரர் ஆதங்கம்

இதற்கு முடிவில் வைபவ் சூர்யவன்சி அதிரடியாக அரைசதம் அடித்து வெறும் 31 பந்தில் 6 பௌடண்ரி மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 86 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் கனிஷ்க் சவுகான் 42 பந்தில் 43 ரன்கள் எடுக்க இந்திய அண்டர் 19 அணி ஆறு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது தொடரில் இரண்டுக்கு ஒன்று என முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -
Published by