இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆயுஸ் மத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தற்போது இந்திய அண்டர் 19 அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. தற்போது இந்திய அண்டர் 19 அணி முதலில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கு நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி 234 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருந்தது.
கலக்கல் பந்துவீச்சு
இன்று தொடங்கிய முதல் ஒரு நாள் போட்டிக்கான தாசில் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் இஷாக் முகமத் அதிரடியாக 28 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். இதற்கு அடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக திரும்பி வந்தார்கள்.
இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு ராக்கி பிளின்டாப் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 90 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். முடிவில் அந்த அணி 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் கனிஷ்க் சௌகான் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.
சூரியவன்சி அதிரடி
இதை தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ஆயுஸ் மத்ரே 30 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒருமுனையில் அதிரடி காட்டிய இன்னொரு துவக்க ஆட்டக்காரர் வைபவ் சூரியவன்சி 19 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 252 ஸ்ட்ரைக் ரேட்டில் 48 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : 97 ரன்னில் மாறும் 49 வருட சரித்திரம்.. ஜெய்ஸ்வால் முன் இருக்கும் மெகா ரெக்கார்டு.. கேட்ச் மிஸ்க்கு பரிகாரம் செய்வாரா?
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விக்கெட் கீப்பர் அபியான் குந்து அதிரடியாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 34 பந்தில் 45 ரன்கள் எடுத்தார். இந்திய அணி வெறும் 24 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.






