அஸ்வின் சுழலில் சிக்கி சிதறிய ஆஸ்திரேலியா! இந்திய அணி அபார இன்னிங்ஸ் வெற்றி!

0
1115

பார்டர் கவாஸ்கர் கோப்பையின் முதலாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த ஒன்பதாம் தேதி துவங்கியது . இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் அபார பந்துவீச்சில் 177 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது . முதல் இன்னிங்சில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாகப் பந்துவீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார் .

இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி ரோகித் சர்மாவின் சிறப்பான ஆட்டத்தால் இரண்டாம் நாள் முடிவில் வலுவான நிலையை எட்டியது . ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது ஒன்பதாவது சதத்தை நிறைவு செய்தார். அவர் 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்த பின்பு எட்டாவது விக்கெட்டிற்கு அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக ஆடி இந்தியா அணியின் ரண்களை உயர்த்தினார் . நேற்றைய ஆட்டநேர முடிவில் இந்தியா 321 ரன்களுக்கு ஏழு விக்கெட் களை இழந்து இருந்தது . ரவீந்திர ஜடேஜா 67 ரன்களுடனும் அப்சர் பட்டேல் 52 ரன்கள்டனும் களத்தில் இருந்தனர் .

- Advertisement -

இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணி ரவீந்திர ஜடேஜாவின் விக்கெட்டை விரைவாக இழந்தது . 70 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா டாட் மர்பி பந்து வீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து அக்சர் பட்டியல் உடன் ஜோடி சேர்ந்த முகமது சமி அதிரடியாக ஆடி இந்திய அணியின் முன்னிலை 200 ரண்களை தாண்ட உதவினார் . 47 பந்துகளில் 37 ரன்களை எடுத்திருந்த சமீ மர்பி பந்துவீச்சுலையே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார் . மேலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அக்சர் பட்டேல் 84 ரன்கள் கம்மின்ஸ் பந்துவீச்சில் இறுதியாக ஆட்டம் இழந்தார் . இந்திய அணி 400 ரன்களுக்கு உணவு இடைவேளைக்கு முன்பு அனைத்து விக்கெட்களையும் இழந்தது . இதன் மூலம் ஆஸ்திரேலியா அணியை விட 223 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது .

உணவு இடைவேளைக்குப் பின் தங்களது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ரவிச்சந்திரன் அஸ்வினின் சுழலில் சிக்கி சின்னாபின்னம் ஆனது . அந்த அணியின் பேட்ஸ்மேன் யாருமே நிலைத்து நின்று ஆடவில்லை . அஸ்வினின் மாயாஜால சூழலில் சீட்டுக் கட்டுகள் போல் ஒருவர் பின் ஒருவராக சரிந்தனர். இதனால் தேநீர் இடைவேளைக்கு முன்பாக 91 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது ஆஸ்திரேலியா . இதன் மூலம் இந்திய அணி ஒரு எலிங்ஸ் மட்டும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றிருக்கிறது ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் ஸ்மித் மட்டும் 25 ரங்களுடன் களத்தில் இருந்தார் .

இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பதிவு 37 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார் . முகமது சமீ மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் . இதன் மூலம் இந்தியா பார்டர் கவாஸ்கர் தொடரில் 1-0, என்ற கணக்கில் தனது ஆதிக்கத்தை தொடர்கிறது .

- Advertisement -