ரோகித்துக்கு கம்பீர் விருது.. பணிவா நிலையா இருங்க.. இது ஆரம்பம்தான் என அறிவுரை – முழு விவரம்

0
172
Gambhir

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரருக்கு இம்பேக்ட் பிளேயர் விருதை கொடுத்த கம்பீர் மிக முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

நேற்று முன்தினம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோற்கடித்தது. இந்த போட்டியில் ரோகித் சர்மா சாதம் மற்றும் விராட் கோலி அரை சதம் அடித்தார்கள். மேலும் இறுதி வரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற வைத்தார்கள்.

- Advertisement -

ட்ரெஸ்ஸிங் ரூமில் பாராட்டு

இதைத்தொடர்ந்து ரோஹித் சர்மாவுக்கு இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் அந்த போட்டிக்கான இம்பேக்ட் பிளேயர் விருது கொடுக்கப்பட்டது. அப்பொழுது இந்திய வீரர்கள் அனைவரும் ரோகோ ரோகோ என ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியின் பெயர்களை சேர்த்து உச்சரித்து கொண்டாடினார்கள்.

இதைத்தொடர்ந்து இந்த விருதை கொடுத்த கம்பீர் இந்திய வீரர்களிடையே முக்கியமான சில விஷயங்கள் குறித்து பேசினார். இந்திய வீரர்களை பாராட்டிய அவர் மேலும் எப்படி நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும்? என்பது குறித்து அறிவுரைகளையும் வழங்கினார்.

- Advertisement -

பணிவாக இருங்கள்

இந்த நிகழ்வில் பேசிய கவுதம் கம்பீர் “இந்த போட்டியில் ரோகித் மற்றும் கில் அமைத்த முதல் பார்ட்னர்ஷிப் முக்கியமானது. அதைத்தொடர்ந்து ரோகித் மற்றும் விராட் விளையாடிய விதம் மிகவும் முக்கியமானது. ரோகித்துக்கு கிடைத்த மேலும் ஒரு சதம் சிறப்பானது. இருவரும் அருமையாக விளையாடினார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ரன் துரத்தலில் நாம் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறோம் என்று காட்டியிருக்கிறோம்”

இதையும் படிங்க : நான் இப்படி ஆவேன்னு ஒரு நாளும் நினைக்கல.. இது ஒரு புதிய சவால்.. ஆஸி தொடர் குறித்து கேப்டன் சூரியகுமார் யாதவ்

“நம்முடைய பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆஸ்திரேலியா முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழப்பில்லாமல் 63 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாம் அவர்களை 236 ரன்னுக்கு நிறுத்தியது சிறப்பு. இந்த இடத்தில் ஹர்ஷித் ராணாவை பாராட்ட வேண்டும். நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால் பணிவாகவும் நிலையாகவும் இருங்கள். நீங்கள் தொடர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். இது ஆரம்பம்தான் முடிவு கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -