வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு ; நட்சத்திர அதிரடி வீரர்கள் நீக்கம்

0
39677
IndvsWi2023

அடுத்த மாதம் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட இருக்கிறது!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு ஓய்வில் இருக்கும் இந்திய அணியில் இருந்து வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு எந்தெந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது?

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் மிகவும் மோசமான செயல்பாட்டை கொண்டு இருந்ததாலும், அடுத்து இந்தியாவில் ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடக்க இருப்பதாலும் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு முக்கியமானதாக கருதப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை அறிவித்திருக்கிறது. இதில் சில முக்கிய மாற்றங்கள் நடந்துள்ளன.

எதிர்பார்த்தது போலவே டெஸ்ட் அணியில் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் இருவரும் நீக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் முகமது சமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது. ருத்ராஜ் இந்த இரண்டு அணியிலும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மேலும் டெஸ்ட் அணியில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இடம் பிடித்திருக்கிறார். சஞ்சு சாம்சனுக்கு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்திருக்கிறது. கேஎல் ராகுல் காயத்திலிருந்து குணமடையவில்லை.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி :

ரோகித் சர்மா, சுப்மன் கில், ருத்ராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், ரகானே, விராட் கோலி, கே எஸ் பரத், இசான் கிஷான், அஸ்வின், ஜடேஜா, சர்துல் தாகூர், அக்ஷர் பட்டேல், முகமதுராஜ், முகேஷ் குமார், நவ்தீப் சைனி மற்றும் உனட்கட்.

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி :

ரோஹித் சர்மா, சுப்மன் கில், ருத்ராஜ், விராட் கோலி, சூரியகுமார், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, சர்துல் தாக்கூர்,ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப், உன்ட்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக் மற்றும் முகேஷ் குமார்.