கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

நாடு தான் முக்கியம்.. பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட கூடாது.. உணர்ச்சி வசப்பட்டு பேசிய ஹர்பஜன் சிங்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், வரவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தானை புறக்கணிக்க வேண்டும் என்று தெரிவித்துளளார். இந்த தொடர் செப்டம்பர் 9 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஹர்பஜன், சமீபத்தில் முடிவடைந்த உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ் தொடரில் பங்கேற்றிருந்தார்.

- Advertisement -

அந்த தொடரில் இந்திய சாம்பியன்ஸ் அணி, லீக் சுற்றும் மற்றும் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட மறுத்துவிட்டது.ஷிகர் தவான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், யூசுஃப் பதான் மற்றும் சுரேஷ் ரெய்னா போன்ற முக்கிய வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி, இந்த முடிவை எடுத்தது.

கிரிக்கெட் ஏற்புடையது அல்ல:

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன், “எது முக்கியமானது, எது இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் எளிமையானது. எல்லையில் நிற்கும் நம் வீரர்கள், அவர்களை அடிக்கடி பார்க்க முடியாத அவர்களது குடும்பங்கள், சில சமயங்களில் அவர்கள் தியாகமாகி மீண்டும் வீடு திரும்பாமல் இருக்கிறார்கள்.

“அவர்களின் தியாகம் நம்மைப் பாதுகாக்க மிகப் பெரியது. அதற்கு முன்னால், ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை தவிர்ப்பது மிகச் சிறிய விஷயம். எங்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடு ஒரே மாதிரியானது, எல்லையில் பிரச்சினை நடக்கும்போது, இரு நாடுகளுக்கிடையே பதற்றங்கள் இருக்கும்போது, நாம் கிரிக்கெட் விளையாடச் செல்வது ஏற்புடையதல்ல.”

- Advertisement -

நாடு தான் முக்கியம்:

“இந்த பெரிய பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரை, கிரிக்கெட் என்பது மிகச் சிறிய விஷயம். நாடு எப்போதும் முதலில் வரும்.நம்முடைய அடையாளம் எதுவாக இருந்தாலும், அது இந்த நாட்டால் தான். நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தாலும், நடிகராக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும், யாரும் நாட்டை விட பெரியவர்கள் இல்லை.நாடு எப்போதும் முதலில் வரும், அதற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.”

இதையும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம்.. இப்படி ஒரு வீரரை எல்லாரும் மிஸ் பண்ணிட்டாங்க

“கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடாமல் இருப்பது நாட்டின் முக்கியத்துவத்திற்கு முன்னால் மிகவும் சாதாரணமான விஷயம். எல்லையில் நம் சகோதரர்கள் நின்று, நம்மையும் நம் நாட்டையும் பாதுகாக்கிறார்கள். அவர்களின் தைரியத்தைப் பாருங்கள், எவ்வளவு பெரிய இதயத்துடன் அவர்கள் பணியாற்றுகிறார்கள்.அவர்கள் வீடு திரும்பாதபோது அவர்களது குடும்பங்கள் எவ்வளவு துயரத்தை அனுபவிக்கின்றன என்று நினைத்துப் பாருங்கள். ஆனால் நாம் கிரிக்கெட் விளையாடச் செல்கிறோம்,” என்று ஹர்பஜன் கூறினார்.

- Advertisement -
Published by

Recent Posts