இந்திய கிரிக்கெட் அணி அரசியல் ரீதியான காரணங்களால் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு எந்தவித போட்டிகளிலும் விளையாடுவதில்லை. இதே போல் பாகிஸ்தான் அணியுடன் இருத்தரப்பு தொடரில் இந்தியா விளையாடி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மட்டும் என இந்தியா கூறியதை அடுத்து போட்டிகள் துபாயில் நடத்தப்பட்டது. இந்த சூழலில் காஷ்மீரில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் 28 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தி இருக்கிறது .
பாகிஸ்தானுடன் விளையாட கூடாது:
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் ஆர் சி பி வீரர் கோஸ்வாமி இனி பாகிஸ்தானுடன் ஐசிசி தொடரில் கூட இந்தியா விளையாடக் கூடாது. இனி கிரிக்கெட் விளையாடாதீர்கள். இந்த விவகாரத்தை காரணம் காட்டி இனிமேல் நாங்கள் பாகிஸ்தானுடன் எப்போதும் விளையாட மாட்டோம் என்று கூறுங்கள்.
இதுவரை நடந்தது போதும். இன்று ஐபிஎல் தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து சுமார் ஒரு வாரம் வரை தளத்திற்கு வாருங்கள். இதன் மூலம் காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு நாம் இரங்கல் தெரிவிக்க முடியும். நீங்கள் கிரிக்கெட்டை வழக்கம்போல் விளையாடுங்கள்.
உலகத்திற்கே தெரிய வரும்:
ஆனால் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதன் மூலம் உலகமே இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உற்றுநோக்கி பார்க்கும். கிரிக்கெட் எல்லைகளைக் கடந்து பல நாட்டை சென்று அடைகிறது. நாம் இவ்வாறு கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுவதன் மூலம் இந்த விவகாரம் உலகத்திற்கு தெரிய வரும்.
இதையும் படிங்க: 2025 ஐபிஎல்லை மாற்றும் போட்டி.. 9 அணிகளின் தலைவிதி மாறுமா?.. மும்பை தரும் எச்சரிக்கை
இதன் மூலம் அவர்களும் நம்முடன் துணை நிற்பார்கள். நம்மால் உயிரிழந்தவர்களுக்கு செய்யும் சின்ன விஷயம் இதுதான். இதையாவது நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன் என்று கோஸ்வாமி கூறியுள்ளார். உயிரிழந்த சுற்றுலா பயணிகளுக்கு விராட் கோலி,சச்சின் டெண்டுல்கர், முகமது சிராஜ் உள்ளிட்ட வீரர்கள் இரங்கல் தெரிவித்து இருக்கிறார்கள்.






