“எங்களோட விளையாட இந்தியா முன்ன மாதிரி பயப்பட வேணாம்” – பாகிஸ்தான் அப்துல் ரசாக் சர்ச்சையான வேண்டுகோள்!

0
332
Rassaq

அரசியல் காரணங்களுக்காக இந்திய பாகிஸ்தான் நாடுகள் கிரிக்கெட் போட்டிகளில் தனிப்பட்ட முறையில் 10 வருடங்களாக விளையாடிக் கொள்வதில்லை.

கடைசியாக 2012-13 ஆம் ஆண்டில் இரு அணிகளும் தனிப்பட்ட இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரில் விளையாடியது. இதற்கு அடுத்து ஐசிசி தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் மோதி வருகிறது.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளும் கடைசியாக டி20 உலகக்கோப்பையில் மோதிக்கொண்டன. அந்த போட்டியில் இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில் விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரது சிறப்பான பேட்டிங் பங்களிப்பில் வெற்றி பெற்றது.

இதற்கு அடுத்து ஆசிய கோப்பைத் தொடர் இந்த முறை ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தானில் வைத்து நடத்தப்பட இருந்தது. இதற்கு இந்திய அணி செல்வதற்கு இந்திய அரசாங்கம் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி தரவில்லை. இந்த காரணத்தால் தற்பொழுது இந்த ஆசிய கோப்பைத்தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் பிரித்து நடத்தப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் நடத்தப்பட இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு பாகிஸ்தான் அணி வருவதற்கு சம்மதித்து விட்டது. போட்டி அட்டவணையில் எந்த மைதானத்தில் எந்த அணி உடன் விளையாட வேண்டும் என்பதில் மட்டும் முரண்டு பிடித்து வந்தது. இறுதியில் அதுவும் தீர்க்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் அரசியல் காரணங்களை எல்லாம் விட்டு இரண்டு அணிகளும் தனிப்பட்ட முறையில் இரு நாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர்களில் மீண்டும் விளையாட வேண்டும் என்று, பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஆனால் அவரது வேண்டுகோள் சர்ச்சையான முறையில் அமைந்துள்ளதுதான் பிரச்சனையாக இருக்கிறது.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது
“நாங்கள் பரஸ்பர மரியாதை மற்றும் நட்பை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் விளையாடுவதற்கு எப்பொழுதும் மறுக்கவில்லை. எங்களுடன் விளையாடாத இந்திய அணிதான் இருக்கிறது.

97 – 98 காலக்கட்டத்தில் நாங்கள் வலிமையாக இருந்தோம். அப்போது இந்திய அணி எங்களுடன் அதிகம் விளையாடவில்லை. காரணம் அவர்கள் எப்போதும் தோற்றுக் கொண்டே இருந்தார்கள்.

ஆனால் இப்போது நிலைமைகள் மாறிவிட்டது. நாம் 2023ல் இருக்கிறோம். ஆம் நம்முடைய சிந்தனைகளை மாற்ற வேண்டும். எந்த அணியும் சிறியது பெரியது கிடையாது. அந்தந்த நாளில் சிறப்பாக செயல்படுவதுதான் முக்கியம்.

இந்தியா பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே நன்றாக இருக்கின்றன. பாகிஸ்தான் அணி பலவீனமானது என்று சொல்ல முடியாது. தற்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஆசஸ் தொடரில் 2 அணியில் எது பலவீனமானது என்று சொல்ல முடியாது. சிறப்பாக செயல்படும் அணி வெற்றி பெறுகிறது. எனவே நாம் இதிலிருந்து வெளியேறி இரண்டு நாடுகளும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிக் கொள்ள வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!