இந்திய கிரிக்கெட்

374 ரன்.. சாதனை டார்கெட்.. வாஷிங்டனின் மாஸ் சம்பவம்.. இந்திய அணி தொடரை சமன் செய்யுமா?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 374 ரன்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 247 ரன்கள் எடுத்து 23 ரன்கள் முன்னிலை பெற்றது. நேற்று இரண்டாவது நாள் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்திருந்தது.

அசத்திய இந்திய பேட்ஸ்மேன்கள்

இன்று தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு நைட் வாட்ச்மேன் ஆகாஷ் டீப் 66 ரன்கள், சிறப்பாக விளையாடி ஜெய்ஸ்வால் 118 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் மற்றும் துருவ் ஜுரல் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்திய அணி ஓரளவுக்கு நல்ல நிலையை எட்டியது.

இந்த நிலையில் கடைசி விக்கெட்டுக்கு அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 39 பந்தில் அரைசதம் அடித்தார். இறுதியில் அவர் 46 பந்தில் நான்கு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர் உடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 396ரன்கள் குவித்து 174 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்தது.

- Advertisement -

சாதனை இலக்கு

இந்த லண்டன் ஓவல் மைதானத்தில் இதுவரையில் 265 ரன்கள் துரத்தியதே சாதனைக்காக இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணி 374 ரன்கள் இலக்க நிர்ணயத்த காரணத்தினால் வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதனால் இந்திய அணி தொடரை சமன் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடுகளமும் பந்து வீச்சிக்கு உதவியாகவே காணப்படுகிறது.

இதையும் படிங்க : நாட்டை விட நீ உனக்காகவே ஆடுற.. இங்கி கீப்பர் பேச்சுக்கு ஜெய்ஸ்வால் தந்த பதிலடி – களத்தில் என்ன நடந்தது?

அதே சமயத்தில் இங்கிலாந்து அணி 2022ஆம் ஆண்டு எட்ஜ்பஸ்டன் 378 ரன்கள், இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் லீட்ஸ் மைதானத்தில் 373 ரன்கள் என இரண்டு முறை 370 ரன்கள் தாண்டி இந்திய அணிக்கு எதிராக சேஸ் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts