தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 359 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்து இருக்கிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 350 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது. ஆனால் வெறும் 17 ரன்கள் வித்தியாசத்தில் தான் இந்தியா வென்றது.
இந்த நிலையில் ராய்ப்பூரில் பனிப்பொழிவு மேலும் அதிகமாக இருக்கும் என்பதால் முதலில் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர் ஜெய்ஷ்வால் 22 ரன்களிலும், ரோகித் சர்மா 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இந்த சூழலில் மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ருதுராஜ் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் .
கோலி, ருதுராஜ் சதம்:
இந்த ஜோடி தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை அபாரமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தது. ஒரு கட்டத்தில் இவர்களைப் பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் தடுமாறினர். இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்த நிலையில் தொடர்ந்து அதிரடி காட்டினர்.
சிறப்பாக விளையாடிய ருதுராஜ் 77 பந்துகளில் தன்னுடைய முதல் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. ருதுராஜ் ஆட்டம் இழந்தவுடன் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி தன்னுடைய 53வது ஒரு நாள் கிரிக்கெட் சதத்தை பூர்த்தி செய்தார்.
ரன் குவிப்பு:
விராட் கோலி 102 ரன்களில் ஆட்டம் இழந்தார். இந்த சூழலில் கே எல் ராகுல் கேப்டனாக இருக்கும்போதெல்லாம் விராட் கோலி சிறப்பாக விளையாடியிருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை கோலி 7 போட்டிகளில் ராகுல் கில் விளையாடி இருக்கிறார்.
இதையும் படிங்க: விராட் கோலி 53வது சதம் விளாசல்.. 12வது முறையாக பேக் டூ பேக் சதம் அடித்து கிங் சாதனை.. தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்
இதில் 4 போட்டிகளில் சதம், இரண்டு போட்டிகளில் அரை சதம், ஒரு டக்அவுட் என மொத்தம் 98 என்ற சராசரியை கோலி வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டி சதத்தை விராட் கோலி அடித்திருக்கிறார். இறுதியில் ராகுல் 33 பந்துகளில் அரை சதத்தை கடக்க கடைசி ஓவரில் மட்டும் 18 ரன்கள் இந்திய அணி குவித்தது. இதனால்
இந்திய அணி 50 ஓவர் முடிவில் 358 ரன்களை குவித்துள்ளது.






