இன்று இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணியும், இந்திய புதிய டெஸ்ட் கேப்டனும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்தும் அஜித் அகர்கர் பேசியிருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் மூத்த மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றார்கள். இந்த ஓய்வுக்கு பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து ரசிகர்களுக்கு தற்போது விளக்கம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
நிரப்ப முடியாத விராட் கோலி இடம்
இதுகுறித்து அஜித் அகர்கர் பேசும் பொழுது ” வீரர்களின் ஓய்வு என்பது அவர்களுடைய தனிப்பட்ட விஷயம். அவர்கள் தங்கள் ஓய்வு பெறுவது குறித்து என்னை தொடர்பு கொண்டார்கள். அவர்கள் ஓய்வு பெற்றாலும் ஓய்வு பெறாவிட்டாலும் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்தான். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருமே மிகப்பெரிய வீரர்கள். அவர்களிடத்தை நிரப்புவது சாதாரண விஷயம் இல்லை”
“இந்திய கிரிக்கெட்டில் விராட் கோலியின் இடத்தை நிரப்புவது என்பது மட்டுமே சாத்தியம் இல்லாத விஷயம். 123 டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்கள் 30 சதங்கள் அடித்திருக்கிறார். நிச்சயமாக நாங்கள் அவரை தவற விடுவோம். மேலும் அவர் ஓய்வு பெறுவது குறித்து எங்களிடம் ஏப்ரல் மாசமே தெரிவித்துவிட்டார். அவர் ஓய்வு முடிவை எடுத்து விட்டதாக அப்பொழுதே எங்களிடம் கூறிவிட்டார்”
மூன்று பேருமே ஜாம்பவான்கள்
“விராட் கோலி ரோகித் சர்மா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்று பேருமே இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்கள். இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்களுடைய பங்களிப்பு மிகப்பெரியது. நாங்கள் நிச்சயமாகவே இந்த மூன்று பேரையுமே இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயம் களத்தில் தவற விடுவோம்”
இதையும் படிங்க : இங்கி டெஸ்ட் தொடர்.. இந்திய புதிய கேப்டன் மற்றும் 18 பேர் கொண்ட அணி அறிவிப்பு.. முழு தகவல்கள்
“கடந்த சில வருடங்களாக இந்திய கிரிக்கெட் அணிகளின் தலைவராக ரோஹித் சர்மா இருந்து வந்தார். சந்தேகத்துக்கு இடமில்லாமல் அவர் மிகப்பெரிய வீரர். நாங்கள் இந்த நிலையில் பல முக்கியமான வீரர்களை இழந்திருக்கிறோம். நிச்சயம் நாங்கள் இவர்கள் எல்லோரையுமே களத்தில் தவற விடுவோம் என்பதுதான் உண்மை. இவர்களுக்கான மாற்றம் கொண்டு வருவது கடினமான விஷயம்” என்று கூறி இருக்கிறார்.