இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி கொடுத்த நேபாள் அணி இத்தாலியிடம் சண்டையிடாமல் சரணடைந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
கிரிக்கெட்டுக்கு மிகவும் புதிதான அணியாக இத்தாலி அணி களம் இறங்கி உள்ளது. மேலும் இங்கிலாந்து அணியிடம் கடைசி ஓவர் வரையில் கடும் போராட்டத்தை வெளிப்படுத்திய நேபாள் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இத்தாலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதிர்ச்சி கொடுத்த நேபாள்
இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு புதிதாக வந்திருக்கும் நேபாள் அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. எனவே இந்த போட்டியில் இத்தாலி அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடி வெற்றிபெறும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். குறிப்பாக இந்திய ரசிகர்கள் இந்த போட்டியை நேரலையில் பார்த்தார்கள்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்ய வந்த நேபாள் அணி யாரும் எதிர்பாராத விதமாக 123 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு கேப்டன் ரோகித் பவுடேல் மட்டும் தாக்குப்பிடித்து விளையாடி 23 ரன்கள் எடுத்தார். நேபாள் அணி குறைந்தபட்சம் 180 ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
இத்தாலி அதிரடி வெற்றி
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இத்தாலி அணி பேட்டிங்கில் இன்னொரு அதிர்ச்சியை நேபாள் அணிக்கு கொடுத்தது. இத்தாலி அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சேர்ந்து நேபாள் பந்துவீச்சை மைதானத்தின் எல்லா பக்கங்களிலும் அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் விளையாடியதைப் பார்க்க மிகப்பெரிய அனுப்பி போல தெரிந்தது.
இதையும் படிங்க : இப்ப என் குடும்பத்தை விட இவங்ககிட்டதான் நிறைய விஷயத்தை சொல்றேன்.. அதை வெளியில கொண்டு வரணும் – கம்பீர் பேச்சு
இதைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய நேபாள் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதத்தை கடந்தார்கள். ஜஸ்டின் மோஸ்கா 44 பந்தில் 60 ரன்கள், அந்தோணி மோஸ்கா 32 ரன்கள் என ஆட்டம் இழக்காமல் எடுக்க, இத்தாலி அணி விக்கெட் இழப்பில்லாமல் 12.4 ஓவரில் இலக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது நேபாள் அணி ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.






