சச்சின் மாதிரி விராட் ஆட முடியாது.. ஏன்னா சச்சின் கிட்ட இந்த விஷயங்கள் இருந்தது – இர்பான் பதான் விளக்கம்

0
334
Irfan

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தில் ஆட்டம் இழந்தது குறித்து இர்பான் பதான் மிகுந்த வருத்தத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

இன்றைய போட்டியில் ரோகித் சர்மா விளையாடாத நிலையில் பும்ரா கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற அவர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த காரணத்தினால் இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் சீக்கிரத்தில் வெளியேறினார்கள்.

- Advertisement -

அணுகுமுறையை மாற்றிய விராட் கோலி

இந்த நிலையில் கில் உடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி ஆப் ஸ்டெம்பில் வெளியில் செல்லும் பந்தை விட்டு மிகவும் சிறப்பான முறையில் பொறுமையாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடினார். மேலும் கில் உடன் இணைந்து 106 பந்துக்கு பொறுமையாக 40 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து, அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

இதனால் இந்த முறை ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் மீண்டும் விராட் கோலி ஸ்காட் போலண்ட் பந்துவீச்சில் மீண்டும் ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை விளையாடி ஆட்டம் இழந்தார். மொத்தம் 69 பந்துகளை சந்தித்த அவர் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார். இது இந்திய தரப்பில் அனைவரையும் ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்திற்கு உள்ளாகியது.

- Advertisement -

சச்சின் போல் ஆட முடியாத விராட் கோலி

விராட் கோலி குறித்து பேசி இருக்கும் இர்பான் பதான் கூறும் பொழுது “இவ்வளவு பெரிய வீரர் ஒவ்வொரு முறையும் ஒரே தவறை செய்கிறார். ஒரு தவறுக்கும் இன்னொரு தவறுக்கும் இடையில் நீண்ட இடைவெளி இருக்க வேண்டும். பெரிய வீரர்கள் அதைச் செய்கிறார்கள். ஆனால் இந்த தொடரில் மட்டும் ஆறு முறைக்கு மேல் இதே முறையில் ஆட்டம் இழந்து இருக்கிறார். இன்று ஆட்டம் இழந்த பந்து அவருக்கு வெகு தொலைவில் இருந்தது”

இதையும் படிங்க : ரோகித் சர்மா மொத்த கிரிக்கெட்டும் முடிந்தது.. சாம்பியன்ஸ் டிராபி ஹர்திக் கேப்டன் – வெளியான புதிய தகவல்கள்

“இன்று இவர் அதே தவறை செய்தார். அவர் சச்சின் போல பேட்டிங் ஒழுக்கத்தை காட்ட வேண்டும். ஆனால் சச்சினுக்கு ஆப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்தை விளையாடுவதற்கு கட் மற்றும் அப்பர் கட் ஷாட்கள் இருந்தது. ஆனால் விராட் கோலிக்கு இந்த ஷாட் எதுவுமே கிடையாது. இதனால் அவர் கவர் டிரைவ் ஆட பார்க்கிறார் அல்லது பந்தை தடுக்கப் போகிறார். எனவே அவர் தொடர்ந்து ஆட்டம் இழக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -