181 ரன்.. யுவராஜ் சிங் சாதனையை உடைத்து காப்பாற்றிய சூர்யா.. ரோகித் புள்ளி விவரங்களுக்கு எதிராக எடுத்த முடிவு

0
832
Surya

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் தனது முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பார்படாஸ் மைதானத்தில் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆச்சரியப்படும் விதமாக பேட்டிங்கை தேர்வு செய்தார். காரணம் இந்த மைதானத்தில் கரீபியன் லீக் டி20 தொடரில் கடைசியாக விளையாடப்பட்ட 16 போட்டிகளில் இரண்டாவது பேட்டிங் செய்த அணியை 10 முறை வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் ரோகித் சர்மா ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று கணித்திருந்தார்.

- Advertisement -

இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியே வந்தனர். எதிர்பார்த்ததை விட ஆடுகளம் மிகவும் மெதுவாக இருந்ததால் ரன்கள் அடிக்க முடியவில்லை. ரோகித் சர்மா 13 பந்தில் 8 ரன், விராட் கோலி 24 பந்தில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.

இந்த நிலையில் மூன்றாவதாக வந்த ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 20 ரன்கள், சிவம் துபே முன் காலில் வந்து விளையாட வேண்டிய பந்துக்கு பின்னால் போய் விளையாடி 7 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இந்தியா அணி 90 ஆண்டுகளுக்கு நான்கு விக்கெட்டை 11 ஓவர்களில் இழந்து நெருக்கடியில் சிக்கியது.

- Advertisement -

இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா உடன் இணைந்து சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 37 பந்துகளில் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெளியேறினார். சூரியகுமார் யாதவ் 28 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்தார். அடுத்து ஹர்திக் பாண்டியா 24 பந்தில் 32, ரவீந்திர ஜடேஜா 5 பந்தில் 7, அக்சர் படேல் 6 பந்தில் 12* ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 181 உடன் எடுத்தது. ரஷித் கான் பரூக்கி தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : 2024-25.. 5 முக்கிய தொடர்கள்.. உள்நாட்டில் இந்தியா விளையாடும் போட்டி அட்டவணை.. பிசிசிஐ வெளியிட்டது

இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் 189 ஸ்ட்ரைக் ரேட்டில் அரைசதம் அடித்திருந்தார். டி20 உலக கோப்பை தொடரில் 180 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் மூன்று அரை சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன் ஆக சூரியகுமார் யாதவ் மட்டுமே இருக்கிறார். அடுத்த இடத்தில் யுவராஜ் சிங் இரண்டு முறை 180 ஸ்ட்ரைக் ரேட்டில் டி20 உலகக் கோப்பையில் அரைசதங்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -