180 ரன்.. ஸ்டார்க் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறை.. இந்திய அணிக்கு கிடைத்த சிறு சாதகம்.. 2வது டெஸ்ட்

0
5135
Starc

இன்று ஆஸ்திரேலியா இந்திய அணிகளுக்கு இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக அடிலைட் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் போட்டியில் விளையாடிய தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மூவரும் நீக்கப்பட்டார்கள். இவர்களுடைய இடத்தில் கேப்டன் ரோஹித் சர்மா சுப்மன் கில் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் மூவரும் சேர்க்கப்பட்டார்கள்.

- Advertisement -

அட்டகாசப்படுத்திய மிட்சல் ஸ்டார்க்

இந்த போட்டியின் முதல் பந்தில் ஸ்டார்க் ஜெய்ஸ்வாலை வெளியேற்றினார். இதைத்தொடர்ந்து கேஎல்.ராகுல் 37, விராட் கோலி 7, அஸ்வின் 22, ஹர்ஷித் ராணா 0 ரங்கள் என வரிசையாக வெளியேற்றினார். அவரது பந்துவீச்சில் சிக்கிய இந்திய அணி பெரிய நெருக்கடியில் விழுந்தது.

இன்னொரு முனையில் அதிரடி காட்டிய நிதீஷ் குமார் ரெட்டி தாக்குப்பிடித்து விளையாடி 42 ரன்கள் எடுத்தார். இதற்கு நடுவில் சுப்மன் கில் 31, ரிஷப் பண்ட் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆஸ்திரேலியா தரப்பில் மிட்சல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

மிட்சல் ஸ்டார்க் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறை

இந்திய அணி இறுதியாக 44.1 ஓவர் தாக்குப்பிடித்து விளையாடி 180 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. பகல் இரவு டெஸ்ட் போட்டி என்கின்ற காரணத்தினால் ஆஸ்திரேலிய அணி மிக முக்கியமான மூன்றாவது செசனை விளையாட வருகிறது. இதனால் இந்திய அணிக்கு ஒரு சிறிய சாதகமும் தற்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : விராட் கோலியின் ரிட்டயர்மெண்ட்டை கணக்கு போட்டேன்.. ஆனா உதவி செய்வது இவர்தான் – நிதீஷ் குமார் ரெட்டி பேட்டி

மேலும் மிட்சல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரையில் இந்திய அணிக்கு எதிராக ஐந்து விக்கெட் கைப்பற்றியது கிடையாது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கட்டுகள் கைப்பற்றி முதல் முறையாக இந்திய அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் ஹால் எடுத்திருக்கிறார்.

- Advertisement -