பாகிஸ்தான் டாஸ் ஜெயித்து தப்பான முடிவு எடுத்துட்டாங்க.. நாங்க பேட்டிங் செய்யவே விரும்பினோம் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
13
Surya

இன்று டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறது. பாகிஸ்தான அணியின் இந்த முடிவு குறித்து இந்திய கேப்டன் சூரியகுமார் யாரோ பேசியிருக்கிறார்.

நடப்பட்ட டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மழை அச்சுறுத்தல் இருக்கும் என்று நினைத்த நிலையில் இதுவரையில் மழை காணப்படவில்லை.

- Advertisement -

பாகிஸ்தான் அணி

இன்று பாகிஸ்தான் அணியில் உஸ்மான் தாரிக் உடன் சேர்த்து மொத்தம் நான்கு பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள் இடம் பெறுகிறார்கள். மேலும் அவர்களுடைய கேப்டன் சல்மான் அலி ஆகா பகுதி நேர ஐந்தாவது சுழல் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

இந்த நிலையில் கொழும்பு பிரேமதாசா மைதானம் மிகப்பெரியது மேலும் ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமானது. இந்த வகையில் இது பாகிஸ்தான் அணிக்கு சாதகமான விஷயமாக அமைகிறது. உஸ்மான் தாரிக் மிகவும் முக்கியமான பந்துவீச்சாளராக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

இந்திய அணியின் திட்டம்

இந்த போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடத்திற்கு மீண்டும் அபிஷேக் ஷர்மா திரும்பி வந்திருக்கிறார். மேலும் அர்ஸ்தீப் சிங் இடத்திற்கு குல்தீப் யாதவ் கொண்டுவரப்பட்டிருக்கிறார். இந்த இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் ஜெயிக்க ஒரே வழிதான் இருக்கு.. முடிஞ்சா இத பண்ணி இந்தியாவை ஜெயிங்க – ஸ்ரீகாந்த் சவால்

இந்த போட்டி குறித்து சூர்யா குமார் யாதவ் நிகழ்வில் பேசும்பொழுது “இந்த போட்டியில் நாங்கள் டாஸ் வென்று இருந்தால் முதலில் பேட்டிங் செய்யவே நினைத்திருந்தோம். கடந்த இரண்டு ஆட்டங்களிலும் நாங்கள் இரண்டாவது பந்து வீசித்தான் வெற்றி பெற்று இருந்தோம். இதை நாங்கள் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை. இது மிகப்பெரிய போட்டி. குறிப்பிட்ட நாளில் யார் சிறப்பாக செயல்படுகிறார்கள் அவர்கள் வெல்வார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -