U19 உலகக் கோப்பை.. பாகிஸ்தானை வென்று இந்திய அணி செமி பைனலுக்கு தகுதி.. தவறான திட்டத்தால் ஏற்பட்ட தோல்வி

0
12
ICT

இன்று அண்டர் 19 டி20 உலக கோப்பை தொடரில் செமி பைனலுக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்திய அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று செமி பைனலுக்கு தகுதி பெற்றிருக்கிறது.

அதே சமயத்தில் இந்திய அணியின் ரன் ரேட் அதிகமாக இருந்த காரணத்தினால் போட்டியை தோற்றாலும் குறைந்த ரன் வித்தியாசத்தில் வென்றால் செமி பைனலுக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலைமை இருந்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

- Advertisement -

கரை சேர்ந்த இந்திய அணி

முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஆரோன் ஜார்ஜ் 16, வைபவ் சூரியவன்சி 30, கேப்டன் ஆயுஸ் மத்ரே 0, வியான் மல்கோத்ரா 21 ரன் என எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஒரு கட்டத்தில் இந்திய அணி 200 ரன் கூட எடுக்காது என்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நிலையில் பொறுப்பாக விளையாடிய வேதாந்த் திரிவேதி அரைசதம் அடித்து 98 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் அம்பரீஷ் 38 பந்தில் 29 ரன்கள், கனிஷ்க் சௌகான் 29 பந்தில் 35 ரன்கள், கிலான் படேல் 15 பந்தில் 21 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக இந்திய அணி ஒரு வழியாக 252 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

பாகிஸ்தானின் தவறான திட்டம்

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி இந்த இலக்கை 33 ஓவர்களில் ஏட்ட வேண்டும் என நிலைமை ஏற்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி நிர்வாகம் செமி பைனலை விட இந்திய அணியை வெல்ல வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைத்திருந்தது தெரிந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அதிரடியை காட்ட நினைக்கவில்லை. இறுதியில் இது அவர்களுக்கு மோசமானதாக மாறியது.

இதையும் படிங்க : 207 ரன்.. பாகிஸ்தான் முதல் முறை சாதனை வெற்றி.. ஆஸி ஒயிட் வாஷ்.. உள்நாட்டில் சிறப்பான சம்பவம்

பாகிஸ்தான் அணிக்கு ஹம்சா சாகுர் 49 பந்தில் 42 ரன்கள், உஸ்மான் கான் 92 பந்தில் 66 ரன்கள், கேப்டன் பர்கான் யூசுப் 39 பந்தில் 38 ரன்கள் எடுத்தார்கள். வேறு யாரும் தாக்குப்பிடித்து நின்று விளையாடவில்லை. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் 194 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 58 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று செமி பைனலுக்கு தகுதி பெற்றது. மேலும் அங்கு ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

- Advertisement -