இந்தியா பாகிஸ்தான் போட்டி.. வெறும் 10 செகண்டுக்கு விளம்பர தொகை இவ்வளவா.. பிரமிக்க வைக்கும் ஆசிய கோப்பை 2023!

0
299

பதினாறாவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் ஹைபிரிட் முறையில் நடைபெற இருக்கிறது . இந்தப் போட்டிகளில் 9 ஆட்டங்கள் இலங்கையிலும் நான்கு ஆட்டங்கள் பாகிஸ்தானிலும் நடைபெறுகிறது .

பாகிஸ்தானில் வைத்து நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை போட்டிகள் அரசியல் காரணங்களுக்காக இந்தியா வர மறுத்ததால் இலங்கை மற்றும் பாகிஸ்தான் என இரண்டு நாடுகளில் வைத்து நடைபெற இருக்கிறது. நாளை துவங்க இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகளில் நேபாளம் மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

அரசியல் காரணங்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் போட்டித் தொடர்களில் விளையாடாமல் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றன உலகெங்கிலும் பெரும் பரபரப்பு ஏற்படுத்தக்கூடிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு இரு மடங்காக இருக்கும். கடைசியாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் கடந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சந்தித்தனர் . இந்தப் போட்டியை சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமான மக்கள் மைதானத்தில் கண்டு களித்தனர்.

மேலும் கோடிக்கணக்கான மக்கள் உலகெங்கிலும் டிவி மற்றும் லைவ் ஸ்ட்ரீமிங் மூலமாக இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை நேரலையில் கண்டனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ரசிகர்களுக்கு பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பு இருப்பது போல் விளம்பரதாரர்களுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் ஜாக்பாட் அடிக்கும். இந்தப் போட்டிகளை உலகெங்கிலும் இருந்து அதிகமான ரசிகர்கள் கண்டு களிப்பதால் இவற்றில் ஓவர்களிடையே ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான கட்டணமும் அதிகமாக இருக்கும்.

வருகின்ற செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் உள்ள கண்டி நகரில் மோத இருக்கிறது. இந்தப் போட்டிகளுக்கான டிக்கெட் அனைத்தும் விற்பனைக்கு வந்த சில நிமிடங்களிலேயே வெற்றி தீர்ந்தது. மேலும் ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மூன்று முறை மோதுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. செப்டம்பர் இரண்டாம் தேதி இரண்டாம் அணிகளும் முதல் சுற்றில் மோத இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஃபோர் சுற்றிலும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் நிச்சயமாக விளையாடும் . மேலும் இந்த இரண்டு அணிகளும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் மூன்றாவது முறையாக விளையாடுவதற்கும் வாய்ப்பு இருப்பதால் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பத்து நொடிகள் வரும் விளம்பரங்களுக்கான கட்டணங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது . அதன்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் பத்து நொடிகள் வரும் விளம்பரத்திற்கு கட்டணமாக 25-30 லட்ச ரூபாய் தொலைக்காட்சி நிறுவனம் நிர்ணயித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் ஆசிய கோப்பை போட்டிகளின் மூலம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தொலைக்காட்சி நிறுவனம் 400 கோடி ரூபாய் விளம்பரங்களின் மூலம் மட்டுமே ஈட்டும் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய கோப்பை போட்டிகளை தொடர்ந்து உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கிறது . இந்த உலகக்கோப்பை தொடரில் அக்டோபர் மாதம் 14ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் வைத்து நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பை போட்டி தொடருக்கு இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணியை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி செல்கிறது . பாகிஸ்தான் அணி ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் வைத்து 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை செப்டம்பர் இரண்டாம் தேதி காண்பதற்காக உலகமே எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கிறது.