இன்று இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. மேலும் பயிற்சியாளர் கம்பீர் எடுத்த ஒரு முடிவு பெரிய சர்ச்சையாக மாறி விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தரப்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தென் ஆப்பிரிக்கா தரப்பில் மொத்தம் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. போட்டியின் ஆரம்பம் முதலில் பனிப்பொழிவு காணப்பட்டது.
இந்திய பவுலர்கள் சொதப்பல்
முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களில் ரீஸா ஹென்றிக்ஸ் 10 பந்துகளில் எட்டு ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து கேப்டன் எய்ட்ன் மார்க்ரம் 26 பந்துகளில் 29 ரன்கள், டோனவன் பெரிரா 16 பந்தில் 30 ரன்கள், டேவிட் மில்லர் 12 பந்தில் 20 ரன்கள் எடுத்தார்கள்.
ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய குயின்டன் டி காக் 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 90 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் வரும் சக்கரவர்த்தி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இன்று பனிப்பொழிவு இருந்த நிலையில் அதற்கு ஏற்ற வகையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் செயல்படத் தவறியது பின்னடைவை உருவாக்கியது.
கம்பீரின் மெகா சொதப்பல்
இதைத்தொடர்ந்து விளையாட வந்த இந்திய அணிக்கு துணை கேப்டன் கில் கோல்டன் டக் ஆனார். இதைத்தொடர்ந்து பயிற்சியாளர் கம்பீர் சம்பந்தமே இல்லாமல் அச்சர் படையலை அனுப்பி வைத்தார். இதனால் இந்திய அணிக்கு பவர் பிளேவில் ரன்கள் வராமல் பெரிய நெருக்கடி உருவானது.
அங்கிருந்து இந்தியா அணிக்கு தொடர்ந்து சரிவுதான் ஏற்பட்டது. அபிஷேக் ஷர்மா 17, அக்சர் படேல் 21, சூரியகுமார் 5, ஹர்திக் பாண்டியா 20, ஜிதேஷ் சர்மா 27 ரன்கள் எடுத்தார்கள். பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக வந்த திலக் வர்மா மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 34 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : ஒரு ஓவரில் 7 சம்பவம்.. அர்ஷ்தீப் சிங் செய்த மோசமான காரியம்.. கடுப்பாகி கத்திய கம்பீர் – களத்தில் என்ன நடந்தது?
இந்திய அணி இந்த போட்டியில் 162 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்க அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை தற்காலிகமாக சமன் செய்திருக்கிறது. அந்த அணியின் தரப்பில் பார்ட்மேன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இன்றைய போட்டியில் கம்பீர் செய்த தவறும், கில் மற்றும் சூரிய குமாரின் பேட்டிங் சொதப்பலும் பெரிய அளவில் விமர்சனம் ஆகி வருகிறது.






