சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மகத்தான முதல் சாதனை.. பாகிஸ்தான் வாய்ப்பை பறித்தது.. தொடரும் ஆதிக்கம்

0
155
ICT

இந்திய அணி நேற்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி மகத்தான ஒரு முதல் சாதனையை படைத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு அந்த வாய்ப்பை வழங்க விடாமல் செய்திருக்கிறது.

இந்திய அணி மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசை பட்டியலில் சில காலமாக தொடர்ந்து மிகச்சிறப்பான நிலையில் முதலிடத்தில் இருந்து வருகிறது. கிரிக்கெட் உள்கட்டமைப்பு, தொடர்ந்து சிறந்த இளம் வீரர்களின் வருகை, சிறந்த அணி கட்டுமானம் என இந்திய அணி ஆரோக்கியமாகவே தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

- Advertisement -

எல்லாம் சரியாக இருந்த போதிலும் கூட இந்திய அணிக்கு உலகக்கோப்பை தொடர்கள் கிடைக்காமல் இருந்தது பின்னடைவாக இருந்தது. இந்த நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனால் 13 வருட காலமாக இருந்து வந்த உலகக் கோப்பை வறட்சிக்கு முற்றுப்புள்ளி தற்காலிகமாக வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்கின்ற மகத்தான சாதனையைப் படைத்திருக்கிறது.

இந்தச் சாதனையை படைக்க மிக நெருக்கத்தில் இருந்த பாகிஸ்தான் அணிக்கு முன்பாக, டி20 உலககோப்பை தொடரில் தோல்வி அடையாமல் இந்திய அணி வந்ததின் காரணமாக, இந்தச் சாதனையை படைக்க முடிந்திருக்கிறது. பாகிஸ்தான அணி 142 வெற்றிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : ஜடேஜா இடம் எனக்கு வேண்டாம்.. நான் இதை செஞ்சா மட்டுமே போதும் – வாஷிங்டன் சுந்தர் பேட்டி

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகள் பெற்ற ஐந்து அணிகள் :

இந்தியா 150
பாகிஸ்தான் 142
நியூசிலாந்து 111
ஆஸ்திரேலியா 105
சவுத் ஆப்பிரிக்கா 104