“இந்தியா எங்களுடைய வீடு.. நடந்த விஷயத்தை பற்றி எந்த கவலையும் இல்லை!” – ஆப்கான் கேப்டன் அசரடிக்கும் பேச்சு!

0
12865
Afghanistan

இந்திய அணி இன்று டெல்லியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தனது இரண்டாவது போட்டியில் விளையாடுகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கும் இது இரண்டாவது போட்டி!

போட்டி நடைபெறும் டெல்லி மைதானம் மிகவும் சிறியதாகவும் இருக்கும் அதே சமயத்தில் ஆடுகளம் பேட்டிங் செய்யவும் வசதியாக இருக்கும். எனவே இங்கு ரன் மழை கடுமையாக இருக்கும்.

- Advertisement -

நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா இலங்கைக்கு எதிராக இங்கு 428 ரன்கள் குவித்து உலக கோப்பையில் வரலாற்று உலகச் சாதனை படைத்தது நினைவில் இருக்கலாம். பதிலுக்கு இலங்கையும் 330 ரன்களுக்கு மேல் எடுத்தது.

மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் அணி குறைந்த ஸ்கோரில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில் எல்லையில் பீல்டிங் நின்ற நவீன் உல் ஹக்கை பார்த்து இந்திய ரசிகர்கள் விராட் கோலி பெயரைச் சொல்லி சத்தம் எழுப்பினார்கள்.

- Advertisement -

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு லக்னோ அணிகள் மோதிக்கொண்ட பொழுது இருவருக்கும் இடையே விரும்பத்தகாத பேச்சுவார்த்தைகள் நடைபெற்று பெரிய பிரச்சனையாக மாறியது தெரிந்ததே.

இந்த நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்ட ஆப்கான் கேப்டன் பேசும்பொழுது “பாருங்கள் நீங்கள் கூறியது போலவே இந்தியா எங்கள் வீடு. நாங்கள் இங்குதான் விளையாடினோம். இந்திய மக்கள் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மிகுந்த அன்பை கொடுக்கிறார்கள்.

மைதானத்தில் என்ன நடந்தது, அந்த ஆக்ரோஷம் எல்லோருக்கும் இயல்பாக வரக்கூடிய ஒன்று. இது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானை பற்றியது அல்ல. எனவே இது மாதிரியான உணர்வுகள் யாருக்கும் வரலாம்.

இப்படி ஒன்று நடந்தது, ஆனால் நீங்கள் எங்களுடைய வீரர்களை பார்த்தால் அவர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் போன்ற பெரிய வீரர்களை பார்த்து வளர்ந்தவர்கள். எனவே இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

ஒரு அணியாக சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறோம் என்பது முக்கியம். நாங்கள் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தோம். இது மிக நீண்ட தொடர். இன்னும் எட்டு ஆட்டங்கள் உள்ளன. எனவே நீங்கள் தோற்கும் பொழுது மனநிலை கீழே சென்றால் அது மற்ற ஆட்டங்களை பாதிக்கும். நாங்கள் போய்விட்ட ஆட்டம் பற்றி கவலைப்படாமல், அடுத்த ஆட்டம் குறித்து சிந்தித்து முன்னேற வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!

- Advertisement -