“இந்தியா எங்களை மாதிரியே இருக்கு.. இந்த முறை துரதிஷ்டம் ஏன் மாறாது?” – மேத்யூ ஹைடன் பரபரப்பான பேச்சு!

0
6372
Hayden

நடப்பு ஆண்டு இந்த நவம்பர் மாதத்தில் இந்திய அணி மேற்கொண்டு இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை வென்றால், ஒருநாள் கிரிக்கெட்டின் உலக சாம்பியன் ஆக அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இருக்கும்!

உலக சாம்பியன் ஆவதற்கு இந்தியாவின் கைகளில் இரண்டு போட்டிகள் மட்டுமே இருக்கிறது. மேலும் அதில் ஒரு போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடுகிறது.

- Advertisement -

தற்போது கிரிக்கெட் உலகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு போட்டியாக இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கும் நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிதான் இருக்கிறது.

ஏற்கனவே 2019 ஆம் ஆண்டு இதேபோல் அரையிறுதியில் நியூசிலாந்து அணி எதிர்ப்பாராத விதத்தில் இந்திய அணியை வீழ்த்தியது, தற்போதைய போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு அச்சத்தை உண்டாக்கி இருக்கிறது.

எனவே அந்தத் தோல்வி தற்போதைய இந்திய அணியின் மனதையும் பாதிக்கும் என்று பலர் கருத்து கூறி வருகிறார்கள். குறிப்பாக கடந்த முறை விளையாடிய நியூசிலாந்து அணிகள் இடம் பெற்று இருந்த ராஸ் டெய்லர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதே சமயத்தில் இன்னொரு பக்கம் பார்க்கும் பொழுது இந்திய அணி மூன்று துறைகளிலும் சிறந்த வீரர்களைக் கொண்டு இருக்கிறது. மேலும் அவர்கள் தங்களுடைய சிறந்த செயல் திறனை வெளிகாட்டி வருகிறார்கள். எனவே இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்த எல்லா வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறும்பொழுது “நன்றாக பாருங்கள் இந்தியாதான் இப்பொழுது ஃபார்மில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2003 மற்றும் 2007 இல் தோல்வி அடையாமல் சென்றது போல் தற்பொழுது இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது.

இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு வரும்பொழுது அது இரண்டு குதிரை ரேஸ் ஆகவோ நான்கு குதிரை ரேஸ் ஆகவோ இருக்கும். இந்தியா அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருக்கிறது.

இந்திய அணி மூன்று துறைகளிலும் சிறப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக அவர்களின் பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருக்கிறது. இப்படி இருக்கும் ஒரு அணி இந்த முறை நாக் அவுட் போட்டியில் வெல்லாமல் போகும் துரதிஷ்டத்தை ஏன் உடைக்க முடியாது?” இன்று இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து கேள்வி முன் வைத்திருக்கிறார்!