பாகிஸ்தான் கூட விளையாட இந்தியா பயப்படுது.. மழைய வச்சு தப்பிக்க நினைக்குது.. என்ன நடந்தது தெரியுமா?.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அதிரடி பேட்டி!

0
788
ICT

தற்பொழுது 16ஆவது ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெற்று வருவது நாம் அறிந்ததே. ஆனால் பாகிஸ்தானில் போட்டிகள் எந்த தடையும் இன்றி மிகச் சிறப்பாக நடந்து வர, இலங்கையில் நடைபெறும் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகின்றன!

இலங்கை கண்டி மைதானத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டி மழையால் ஒரு இன்னிங்ஸ் மட்டுமே நடைபெற்றது. இதன் காரணமாக வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிந்தது.

- Advertisement -

இந்த போட்டிக்காக எதிர்பார்த்து இருந்த பல கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாந்து போனார்கள். இதன் பின்னால் பலகோடி ரூபாய் வணிகம் தடைபட்டு போனது. மழையின் காரணமாக போட்டி நடைபெறாமல் போனது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

ஏனென்றால் இலங்கையில் நடத்துவதற்கு பதிலாகவேறு இடங்கள் இருக்கின்றன. மேலும் பாகிஸ்தான் தரப்பில் வேறு இடங்களில் நடத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் தாண்டி இலங்கையில் மழை இருக்கும் என்று தெரிந்தும் இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கையில் நடத்தவே பிடிவாதமாக நின்று இருக்கிறது என்று கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னாள் சேர்மன் நஜாம் சேத்தி கூறுகையில் “பிசிசிஐ மற்றும் ஏசிசி இரண்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் கொழும்புவில் நடக்கும் இரண்டாம் சுற்று போட்டிகள் மழையால் பாதிக்கப்படும் என்பதால், இலங்கை ஹம்மன்தோட்டாவில் நடத்த இருப்பதாக தெரிவித்திருந்தது.

- Advertisement -

அப்படி நடத்துவதற்கான முடிவுகளை எடுத்தோம். ஆனால் அவர்கள் ஒரு மணி நேரத்தில் மனதை மாற்றிக் கொண்டு, மழை வரும் கொழும்புவில் நடத்த முடிவு செய்தார்கள். என்ன நடக்கிறது? பாகிஸ்தானுடன் விளையாடி தோற்றுப் போக இந்தியா பயப்படுகிறதா? மழை முன்னறிவிப்பு எப்படி இருக்கிறது? என்று இப்பொழுது பாருங்கள்.

இவ்வளவு பெரிய போட்டி மழையால் பாதிக்கப்படுவது எவ்வளவு பெரிய ஏமாற்றம்?! நான் பதவியில் இருந்த பொழுது ஐக்கிய அரபு எமிரேட்டில் நடத்துவதற்கு யோசனை சொன்னேன். ஆனால் இலங்கையில் நடத்த வேண்டும் என்று மோசமான சாக்குகள் சொன்னார்கள். துபாயில் வெயில் அடிக்கும் என்றார்கள். ஆனால் இவர்கள் அங்குதான் ஐபிஎல் தொடரிலும், டி20 உலக கோப்பை தொடரிலும் விளையாடியிருந்தார்கள்.விளையாட்டில் அரசியல் என்பது மன்னிக்கவே முடியாது!” என்று கூறி இருக்கிறார்!