இங்கிலாந்து நாளைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இலக்காக 608 ரன்கள் நிர்ணயித்திருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி நிர்வாகம் மிக தாமதமாக டிக்ளர் முடிவை எடுத்ததாக இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.
இந்த போட்டியில் டாஸ் போட்டு முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 587 ரன்கள் எடுக்க இங்கிலாந்து அணி 407 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 180 ரன்கள் முன்னிலை கிடைத்தது. இதைத் தொடர்ந்து இந்திய அணி நேற்று மூன்றாவது நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து 244 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
கேப்டன் கில் உலக சாதனை
நான்காவது நாளில் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு கேஎல்.ராகுல் 55 ரன்கள், ரிஷப் பண்ட் 65 ரன்கள் மேலும் கடைசியில் ஆட்டம் இழக்காமல் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 69 ரன்கள் எடுத்தார்கள்.
இதைத்தொடர்ந்து ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் பில் சதம் அடித்து 161 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் கிரஹாம் கூச் 456 ரன்கள் எடுத்திருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக கில் 430 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் 250 ரன்கள் மேல் எடுத்து, அடுத்த இன்னிங்ஸில் 150 ரன்கள் தாண்டி எடுத்த ஒரே வீரராக உலக சாதனை படைத்திருக்கிறார்.
கம்பீர் மீது விமர்சனம்
இதைத் தொடர்ந்து இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 427 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதன் மூலம் இந்திய அணி 607 ரன்கள் முன்னிலை பெற்று, இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் இலக்காக கொடுத்திருக்கிறது. மேலும் இன்று இந்திய அணி மேற்கொண்டு பதினைந்து ஓவர்களுக்குள் வீச முடியும்.
இதையும் படிங்க : 54 வருடங்கள்.. கில் மீண்டும் சதம்.. யாரும் செய்யாத பல சாதனைகள்.. இங்கிலாந்தில் ரன் வேட்டை
இந்த நிலையில் இந்திய அணி 550 முதல் 575 ரன்கள் முன்னிலை பெற்று இருந்த நிலையில் டிக்ளர் செய்திருக்க வேண்டும் எனவும், நாளை மழை வாய்ப்பு இருக்கின்ற காரணத்தினால் இங்கிலாந்து அணியை ஆல் அவுட் செய்வதற்கு அப்பொழுதுதான் தேவையான ஓவர்கள் கிடைக்கும் எனவும், கம்பீர் பயத்தின் காரணமாக தவறு செய்து விட்டதாக இந்திய ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.






