இன்று இந்திய அணியை தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் விளையாடுகிறது.
இந்த போட்டியில் இந்திய அணி வழக்கம்போல் டாஸ் தோற்றது. இந்திய அணி தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் 20வது முறையாக டாஸ் தோற்று இருக்கிறது. இந்த வகையில் இந்திய அணி ஒரு மோசமான சாதனையையும் செய்து விட்டது.
தற்போது இந்தியாவில் இரவு நேரத்தில் பனிப்பொழிவு மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக முதல் போட்டியில் 349 ரன்கள் எடுத்தும் இந்திய அணியால் வெற்றியை கடைசி ஓவர் வரை உறுதி செய்ய முடியவில்லை. எனவே டாஸ் வெல்வது மிகவும் முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்றும் இந்திய அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து இரண்டாவதாக பந்து வீச இருக்கிறது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா என இரண்டு விரல் சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களால் இரண்டாவது பகுதியில் பனிப்பொழிவில் பந்து வீசுவது கடினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா, லுங்கி நெகிடி மற்றும் கேசவ் மகாராஜ் மூன்று பேரும் உள்ளே வந்திருக்கிறார்கள். இதன் காரணமாக பேட்டிங், ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் பவுலிங் யூனிட் என எல்லா பக்கங்களிலும் தென் ஆப்பிரிக்கா அணி வலிமை அடைந்து இருக்கிறது. டாஸ் தோற்ற நிலையில் இந்தியாவுக்கு இது இரட்டை தலைவலியாக அமைந்திருக்கிறது. அதே சமயத்தில் இந்திய அணி அதே பிளேயிங் லெவனுடன் களம் இறங்குகிறது.
இதையும் படிங்க : கிரீன் இல்லை.. இந்த இந்திய உள்நாட்டு வீரருக்கு தான் ஐபிஎல் ஏலத்துல போட்டி இருக்கும் – அஸ்வின் பேச்சு
இதுகுறித்து இந்திய கேப்டன் கேஎல்.ராகுல் பேசும் பொழுது ” எங்களால் தொடர்ந்து டாஸ் வெல்ல முடியாமல் போய்க் கொண்டிருக்கிறது. கடந்த போட்டியிலும் அவர்கள் எங்களை முன்பே தள்ளி விட்டார்கள். ஆனால் இதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். ஏனென்றால் நாங்கள் விளையாடும் எல்லா போட்டியிலும் பனிப்பொழிவு இருக்கும் என்று உணர்ந்திருக்கிறோம். எனவே ஸ்கோர் போர்டில் நிறைய ரன்கள் வைக்க வேண்டும் என்று தெரிந்திருக்கிறோம். கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம். முன்கூட்டியே விக்கெட் கைப்பற்றினோம். இன்றும் ஆடுகளம் நன்றாக இருக்கிறது நன்றாக செயல்படுவோம்” என்று கூறி இருக்கிறார்.