146 ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை செய்த இந்தியா!

0
1502
Rohitsharma

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய ஆண்களுக்கு கிரிக்கெட் அணி தற்போது முதலில் நடைபெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது!

இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் வலுவான முன்னிலை வகிக்கிறது!

- Advertisement -

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால், கடைசி கட்ட ஆட்டக்காரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் அரை சதங்கள் அடிக்க, விராட் கோலி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியா தாண்டி சதம் அடிக்க இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. கெமார் ரோச் மற்றும் ஜோமால் வாரிக்கன் தலா மூன்று விக்கட்டுகளை வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கைப்பற்றினார்கள்.

இது தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேப்டன் பிராத்வெய்ட் மிகப் பொறுமையாக விளையாடி இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்து 75 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். இதற்கு அடுத்து ஆட்டத்தில் நான்காவது நாள் புதிய பந்தை சிராஜ் கையில் எடுத்து மேலும் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியை 255 ரன்களுக்கு நிறுத்தினார். இந்தியா தரப்பில் சிராஜ் 60 ரண்களுக்கு 5 விக்கெட் வீழ்த்தினார்.

நல்ல ரன் முன்னிலை பெற்ற இந்திய அணி, மூன்றாவது அணியாக மழையும் குறுக்கிட்டு விளையாடிக் கொண்டிருக்கும் காரணத்தால், ஒருநாள் கிரிக்கெட் போல வேகமாக விளையாடி ரன்கள் சேர்த்து டிக்ளர் செய்து, பின்பு வெஸ்ட் இண்டீஸ் அணியை மடக்குவதற்கு ஓவர்களை வைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட்டது.

- Advertisement -

இந்தத் திட்டத்தின்படி துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் அதிரடியில் மிரட்டினார்கள். டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல் இல்லாமல் டி20 போட்டி போல் விளையாடினார்கள். ரோஹித் சர்மா 35 பந்தில் அரை சதம் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜெய்ஸ்வால் 30 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத் தொடர்ந்து விளையாடிய சுப்மன் கில் 37 பந்தில் 29 ரன்களும், மிக அதிரடியாக விளையாடிய இஷான் கிஷான் 34 பந்தில் நான்கு பவுண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் உடன் 52 ரன்கள் குவிக்க இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 181 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் இரண்டு விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு கடைசி நாளான இன்று எட்டு விக்கெட் கைவசம் இருக்க 289 ரன்கள் தேவைப்படுகிறது.

இந்தப் போட்டியில் மழையின் குறுக்கீடு அதிகமாக இருந்த காரணத்தால் வேகமாக விளையாட முடிவு செய்த இந்திய அணி 12.2 ஓவர்களில் நூறு ரண்களை எட்டியது. 146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அதிவேகமாக அடிக்கப்பட்ட முதல் நூறு ரன்கள் இதுதான். மிக அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கும் இங்கிலாந்து கூட இவ்வளவு விரைவாக 100 ரன்களை எட்டியது கிடையாது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணிக்கு இப்படி ஒரு உலகச் சாதனை கிடைத்திருக்கிறது!

12.2 – இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் – 2023
13.2 – இலங்கை-பங்களாதேஷ் – 2001
13.3 – இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா – 1994
13.4 – பங்களாதேஷ்-வெஸ்ட் இண்டீஸ் – 2012
13.4 – இங்கிலாந்து-பாகிஸ்தான் 2022 – ராவல்பிண்டி
13.4 – இங்கிலாந்து-பாகிஸ்தான் 2022 – கராச்சி