நாளை பாக்ஸிங் டே அன்று உலகக் கிரிக்கெட்டில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மெல்போன் மைதானத்தில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.
இன்னொரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் மைதானத்தில் இந்திய தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
மிக முக்கியமான நாள் என்கின்ற காரணத்தினால், உலக கிரிக்கெட் அட்டவணையில் நான்கு பெரிய நாடுகள் மோதிக் கொள்ளும் போட்டி, ஒரே நாளில் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. கடந்த முறைகளில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என்கின்ற காரணத்தினால், முதல் போட்டியில் வெல்லும் அணி தொடரை இழக்காது, முதல் போட்டியில் தோற்கும் அணி தொடரை வெல்ல முடியாது என்கின்ற வினோதமான சூழ்நிலை உருவாகும்.
இதன் காரணமாக இரு அணிகளுமே முதல் டெஸ்ட் போட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து தயாராகி வருகின்றன. இப்படியான நிலையில் இந்திய அணி திடீரென தனது கடைசி பயிற்சி அமர்வை ரத்து செய்து இருக்கிறது.
ஏனென்றால், பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் 24ஆம் தேதி இரவு முதல் தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்காவில் மழை பெய்து வருகிறது. இதனால் மைதானத்தின் வெளிப்பக்கங்கள் ஈரமாக இருக்கின்றன. எனவே இங்கு இந்திய அணி பயிற்சி செய்வது ஆபத்தில் முடியும் என பயிற்சி ரத்து செய்யப்பட்டு விட்டது. இது இந்திய அணிக்கு ஒரு பின்னாடி ஆகவே பார்க்கப்படுகிறது. உள் அரங்கில் பயிற்சி செய்வது பெரிய பலனை கொடுக்காது.
மேலும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இரண்டு நாட்களில் கடுமையான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அதைத் தொடர்ந்தும்ம் மீதி மூன்று நாட்களில் சிறிது மழை வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே முதல் டெஸ்ட் போட்டி நடைபெறாமல் போனால் கூட ஆச்சரியப்படுவதற்கு கிடையாது. நடைபெற்றாலும் முழு ஐந்து நாட்களும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது!