சாய் சுதர்சனா கருண் நாயரா?.. ரேசில் முந்துவது யார்.. கம்பீர் அகர்கர் அவசரமே காரணம்.. ரசிகர்கள் விமர்சனம்

0
59
Karun

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சாய் சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயரில் இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? அல்லது இருவரும் சேர்ந்து விளையாட முடியுமா? என்கின்ற கேள்விகள் அதிகரித்திருக்கிறது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நான்காவது வேகப் பந்துவீச்சாளராக இடம் பெற்ற சர்துல் தாக்கூர் மிகவும் சுமாராக செயல்பட்ட காரணத்தினால், இந்திய கீழ் வரிசை பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. இது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எனவே அந்த இடத்தை பலப்படுத்த நிதீஷ் குமார் ரெட்டி திடீர் தேவையாக மாறி இருக்கிறார்.

- Advertisement -

சாய் சுதர்சனுக்கு ஏற்பட்ட சிக்கல்

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய டெஸ்ட் அணிக்கு சாய் சுதர்சன் அறிமுகமானார். முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்த அவர் இரண்டாவது இன்னிங்ஸில் சுதாரித்து 30 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் விரித்த வலையில் சிக்கினார். அந்த இடத்தில் அவர் திறமையான தற்காப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

அதே சமயத்தில் கருண் நாயர் மூன்றாவது மற்றும் ஆறாவது இடத்தில் விளையாடக் கூடியவராக இருக்கிறார். ஆனால் சாய் சுதர்சன் எப்பொழுதும் டாப் ஆர்டரில் மட்டுமே விளையாடக் கூடியவராக இருக்கிறார். இதன் காரணமாக இருவரில் கருண் நாயருக்கு வாய்ப்புகள் மிகவும் அதிகரித்திருக்கிறது.

- Advertisement -

கம்பீர் அகர்கர் அவசரப்பட்டார்களா?

உள்நாட்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சாய் சுதர்சன் ஆவரேஜ் 39 ஆக இருக்கிறது. அதே சமயத்தில் அபிமன்யு ஈஸ்வரன் 50க்கும் பக்கத்தில் ரன் ஆவரேஜ் வைத்திருக்கிறார். முதலில் விளையாட அவருக்கு வாய்ப்பு கொடுத்து அவர் நிரூபிக்காத பட்சத்தில் சாய் சுதர்சனை விளையாட வைத்திருக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். இந்த இடத்தில் திறமையின் அடிப்படையில் பார்த்து கம்பீர் அகர்கர் அவசரப்பட்டு விட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க : கொஞ்சம் முன்னே சச்சின் ஸார் பேசினார்.. இத செய்ய சொல்லி இருக்காரு.. ரொம்ப நம்பறார் – பிரித்திவி ஷா தகவல்

இப்போதைக்கு சர்துல் தாக்கூர் இடத்திற்கு குல்தீப் யாதவை கொண்டு வருவதற்கான தேவை அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக ஏழு வரையில் மட்டுமே பேட்டிங்கை வைத்துக் கொள்ள முடியும். மேலும் கீழ் வரிசையில் திறமையாக விளையாட வீரர் தேவையாக இருக்கிறார். எனவே சாய் சுதர்சனை நீக்கிவிட்டு மூன்றாவது இடத்திற்கு கருண் நாயரை அனுப்பி, ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் நிதிஷ்குமார் ரெட்டி மற்றும் ஜடேஜாவை விளையாட வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -