பிளேயிங் லெவனில் அஸ்வினை எடுக்காமல், ஆஸ்திரேலியா வெற்றிக்கு வழிவகுத்துவிட்டீர்கள் – ரோகித், டிராவிட் இருவரையும் விமர்சித்த ரிக்கி பாண்டிங்!

0
734

பிளேயிங் லெவனில் அஸ்வினை எடுக்காமல் மிகப்பெரிய தவறு செய்து விட்டீர்கள் என்று ரோகித் சர்மா மற்றும் டிராவிட் இருவரின் முடிவுகளை விமர்சித்திருக்கிறார் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா இரு அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

- Advertisement -

இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி அமையும்? இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களுடன் செல்வார்களா? அல்லது நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் செல்வார்களா? என்கிற கேள்விகள் எழுந்தது. அதே நேரம் ஒரு ஸ்பின்னருடன் சென்றால் யாரை வெளியில் அமர்த்துவார்கள்? பேட்டிங் பவுலிங் இரண்டிலும் அசத்தும் ஜடேஜாவையா? அல்லது டெஸ்டில் நம்பர் ஒன் பந்துவீச்சாளர் மற்றும் நம்பர் 2 ஆல்ரவுண்டராக இருந்து வரும் அஸ்வினை வெளியில் அமர்த்துவர்களா? என்கிற குழப்பங்கள் நிலவியது.

இந்திய அணி இந்த போட்டியின் பிளேயிங் லெவனில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் சென்றிருக்கிறது. அந்த ஸ்பின்னருக்கான இடத்தில் ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் அஸ்வின் வெளியில் அமர்த்தி முடிவெடுத்த ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரையும் விமர்சித்திருக்கிறார் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங்.

“அஸ்வின் வெளியில் அமர்த்தபட்டது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக அஸ்வின் நல்ல ரெக்கார்ட் வைத்திருக்கிறார். சந்தேகத்திற்கு இடமென்றி அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருக்க வேண்டும். அவரை வெளியில் அமர்த்தி மிகப்பெரிய தவறுகளை ரோகித் சர்மா மற்றும் டிராவிட் இருவரும் செய்து இருக்கின்றனர். யார் இந்த முடிவு எடுத்திருந்தாலும் அது ஆஸ்திரேலியா அணிக்கு இப்போது சாதகமாக முடிந்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

- Advertisement -

தாக்கூர் மற்றும் உமேஷ் யாதவ் இருவரில் ஒருவரை வெளியில் அமர்த்துவது பற்றி சிந்தித்திருக்க வேண்டும். ஜடேஜா கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும். பவுலிங் சில ஓவர்கள் பங்களிப்பை கொடுப்பார். பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை கொடுப்பார். உமேஷ் யாதவ் மற்றும் தாக்கூர் இருவரில் தாக்கூர் சரியாக இருப்பார். ஏற்கனவே இங்கிலாந்தில் நன்றாக செயல்பட்டு இருக்கிறார். பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை கொடுக்கக் கூடியவர். ஆகையால் கண்டிப்பாக அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆஸ்திரேலியா அணியின் வெற்றி வாய்ப்பை இது அதிகரிப்பதாக தெரிகிறது.” என்றார்.