2026 டி20 உலககோப்பை இந்திய அணி.. ஆகாஷ் சோப்ரா வெளியிட்ட கணிப்பு

0
221

2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா,
தேர்வு செய்துள்ளார். ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக தொடர்வாரா என்பதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சூர்யகுமார் யாதவின் துணைக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவுள்ளது. கடந்த சில தொடர்களில் இந்தியாவின் துணைக் கேப்டனாக இருந்த ஷுப்மன் கில், சமீபகாலமாக ரன்கள் குவிக்க தவறியதோடு, காயங்கள் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

பேட்டிங் வரிசை:

இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா,  “உண்மையில் அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர்தான் இந்த அணியின் மூன்று ஓப்பனர்களாக இருப்பார்கள். சஞ்சு சாம்சனை இரண்டாவது விக்கெட் கீப்பராகவும் ஓப்பனிங் விருப்பமாகவும் தேர்வு செய்துள்ளேன். அபிஷேக் ஷர்மாவைப் பற்றி பேசவே தேவையில்லை.

ஏனெனில் இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவிப்பவராக அவர் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஷுப்மன் கில்லை ஏன் தேர்வு செய்தேன் என்று யோசித்தால், ஒருவரை துணைக் கேப்டனாக நியமித்துவிட்டால் அவ்வளவு சீக்கிரம் மாற்ற மாட்டார்கள். ஆனால் ஷுப்மனேதான் துணைக் கேப்டன் என்று உறுதியாக கூற மாட்டேன்.

- Advertisement -

அணி துணைக் கேப்டன் பதவியை திறந்த நிலையில் விட்டுவிடலாம் அல்லது விருப்பங்களை திறந்து வைக்க ஹர்திக் பாண்டியாவை நியமிக்கலாம். அதன் பிறகு இரண்டு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். டாப்பில் அபிஷேக் இருந்தால், திலக் வர்மா இங்கு இருப்பார். இருவரும் நம்பகமான பேட்ஸ்மேன்கள். அவருடன் சூர்யகுமார் யாதவின் பெயரும் இருக்கும்.

சூர்யா ரன்கள் அடிக்கவில்லை என்று சந்தேகம் எழுப்பினால், 2024 முதல் அணியை தொடர்ந்து வெற்றி பெற வைத்து வருகிறார். அவரே நமது கேப்டனாக தொடர்வார். அதன் பிறகு இன்னொரு விக்கெட் கீப்பர் தேவை. அணியில் குறைந்தது இரண்டு விக்கெட் கீப்பர்கள் வேண்டும். எனவே ஜிதேஷ் ஷர்மாவை அணியில் வைத்திருக்க வேண்டும்.

அதன் பிறகு ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல் மற்றும் ஷிவம் துபே. இந்த ஆல்ரவுண்டர்கள் உறுதியானவர்கள். இந்த மூவரும் 100 சதவீதம் அணியில் இடம் பிடிப்பார்கள். சஞ்சு ஓப்பன் செய்தாலும், ஜிதேஷை விளையாட வைக்க வேண்டியிருக்கும்.  ஏனெனில் அணி வாஷிங்டன் சுந்தருக்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியுள்ளது.

இந்திய அணி கணிப்பு:

ரிங்கு சிங்கையா அல்லது வாஷிங்டனா என்றால் போட்டி. ரிங்குவை பயன்படுத்த முடியாது என்று அணி நினைக்கிறது, எனவே வாஷிங்டனை வைத்திருக்க வேண்டும். அதன் பிறகு ஜஸ்ப்ரீத் பும்ரா பற்றி பேசத் தேவையில்லை. ஏன் நேரத்தை வீணாக்குவது? அர்ஷ்தீப் சிங், பேசத் தேவையில்லை. ஏன் நேரத்தை வீணாக்குவது? பிறகு வருண் சக்ரவர்த்தி. விவாதமே தேவையில்லை.

இதையும் படிங்க: சூர்யகுமார் நீங்க இதை மட்டும் சரி பண்ணுங்க.. டி20 உலககோப்பைக்கு முன் ரொம்ப முக்கியம்- வருண் ஆரோன் கருத்து

இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுப்பவராக வருண் சக்ரவர்த்தி இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதன் பிறகு குல்தீப் யாதவை அணியில் வைத்திருக்க வேண்டும். விருப்பங்களை கொடுத்துக்கொள்ளுங்கள். பிறகு ஒரே ஒரு இடம் மீதம். எந்த வேகப்பந்து வீச்சாளரையும் தேர்வு செய்யலாம். எனவே ஹர்ஷித் ராணாவை வைக்கிறேன். அவர் 8-வது இடத்தில் பேட்டிங் விருப்பத்தையும் கொடுக்கிறார்”  2026 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: அபிஷேக் ஷர்மா, ஷுப்மன் கில், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கே), ஜிதேஷ் ஷர்மா, ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா

- Advertisement -