1740 நாட்கள்.. 94 பந்தில் சஞ்சு சாம்சன் தரமான சம்பவம்.. அகர்கர் கம்பீருக்கு அனுப்பிய செய்தி.. துலீப் டிராபி 2024

0
119
Samson

தற்போது துலீப் டெஸ்ட் டிராபியின் மூன்றாவது மற்றும் இறுதிச் சுற்று போட்டிகள் துவங்கியிருக்கின்றன. இதில் இந்திய டி அணிக்காக விளையாடும் சஞ்சு சாம்சன் முதல் தர கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் கழித்து அபார சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

இந்த போட்டியில் இந்தியா பி அணி முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா டி அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் தேவ்தத் படிக்கல் 50, கேஎஸ்.பரத் 52, ரிக்கி பூய் 56 ரன்கள் என முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் அரை சதங்கள் அடித்து நல்ல வலிமையான அடித்தளத்தை உருவாக்கி தந்தார்கள்.

- Advertisement -

பரிதாபமான பார்மில் ஸ்ரேயாஸ் ஐயர்

இந்த நிலையில் இந்த போட்டியில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஐந்து பந்துகளை மட்டுமே சந்தித்து மீண்டும் டக் அவுட் ஆகி பரிதாபமாக வெளியேறினார். நடந்து கொண்டிருக்கும் இந்த தொடரில் மட்டும் மூன்றாவது முறையாக அவர் அவுட் ஆகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு அடுத்து வந்த சஞ்சு சாம்சன் விக்கெட்டை இழக்காததோடு அதிரடியாகவும் விளையாடி நேற்று முதல் நாள் முடிவில் 84 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். எதிர்பார்த்ததை விட டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினாலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஆரம்பித்திருக்கிறார்.

- Advertisement -

94 பந்தில் நீண்ட நாட்கள் கழித்து சதம்

இன்று தொடர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன் அதிரடியாக 94 பந்தில் சதம் அடித்தார். அவர் 101 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 106 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதியாக 87.3 ஓவரில் இந்தியா டி அணி 349 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்தியா பி அணியின் தரப்பில் நவ்தீப் ஷைனி ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : சிராஜிடம் மன்னிப்பு கேட்ட ரிஷப் பண்ட்.. அதிரடியாக காப்பாற்றிய ஆகாஷ் தீப்.. களத்தில் என்ன நடந்தது?

இறுதியாக சஞ்சு சாம்சன் முதல் தர கிரிக்கெட்டில் 2019 ஆம் ஆண்டு ரஞ்சி தொடரில் பெங்கால் அணிக்கு எதிராக சதம் அடித்து 116 ரன்கள் எடுத்திருந்தார். இதற்கு அடுத்து 1740 நாட்கள் கழித்து மீண்டும் இந்திய முதல் தர கிரிக்கெட்டில் அவர் ஒரு சதம் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமாக சிவப்பு பந்தில் எதிர்பாராத விதமாக கொடுக்கப்பட்ட வாய்ப்பை சஞ்சு சாம்சன் அழகாக பயன்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -