நாம அந்த வரலாற மறந்து விடக்கூடாது.. ஏழு நாளுக்குள்ள அந்த சம்பவத்தை பண்ணுங்க – கம்பீர் வேண்டுகோள்

0
97
Gambhir

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியை வென்றால் நாட்டை பெருமைப்படுத்தும் அருமையான வாய்ப்பு இந்திய அணிக்கு இருக்கிறது என இந்திய அணி வீரர்களுக்கு கம்பீர் கூறியிருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் நடந்து முடிந்திருக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து இரண்டு போட்டிகளையும் இந்தியா ஒரு போட்டியையும் வென்று இருக்கிறது. இது தொடர்ந்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி அடுத்த துவங்க இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கான வாய்ப்பு

இந்திய அணி அடுத்து ஐந்தாவது டெஸ்ட் போட்டியை வென்றால் தொடரை சமன் செய்ய முடியும். அப்படி தொடரை சமன் செய்தால் இளம் கேப்டன் தலைமையில் இளம் இந்திய அணி பெரிய சாதனையை படைக்கும். ஏனென்றால் இளம் இந்திய அணி இங்கிலாந்தில் தொடரை இழந்துவிடும் என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணியின் இளம் பேட்டிங் யூனிட் மிகச் சிறப்பான முறையில் விளையாடும் ஐந்தாவது போட்டி வரையில் தொடரை இழுத்து வந்திருப்பது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கிலாந்து அணியை விட இந்திய அணியின் பேட்டிங் யூனிட் பலமானதாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

கம்பீர் வேண்டுகோள்

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “இரு நாடுகளுக்கும் இடையே ஆன வரலாற்றை எப்பொழுதும் மறக்க முடியாது. இதன் காரணமாக இங்கு சுற்றுப்பயணம் செய்வது எப்பொழுதும் உற்சாகமானதாக இருந்திருக்கிறது. மேலும் சவால் ஆனதாகவும் அமைந்திருக்கிறது. நாங்கள் ஒவ்வொரு முறை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்த பொழுதும் கிடைத்த ஆதரவை போற்றுவோம்”

இதையும் படிங்க : ஜடேஜா கபில்தேவ் கிடையாது.. அவரால் வெளிநாட்டு போட்டிய ஜெயிக்க முடியாது.. காரணம் இதுதான் – சித்து பேட்டி

“கடந்த ஐந்து வாரங்கள் இரு அணிகளுக்கும் உற்சாகமானதாகவே அமைந்திருக்கிறது. இரு அணிகளுமே தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பான முறையில் போட்டி அளித்து இருக்கின்றன. இரு அணிகளுமே ஒரு அங்குலத்தை கூட விட்டு தராமல் போராடின. நமது அணிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கிறது. இன்னும் இறுதி முயற்சியை நாம் எடுக்க வேண்டும். நம் நாட்டை பெருமைப்படுத்த இறுதி வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -