ஜடேஜா கபில்தேவ் கிடையாது.. அவரால் வெளிநாட்டு போட்டிய ஜெயிக்க முடியாது.. காரணம் இதுதான் – சித்து பேட்டி

0
115
Jadeja

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைவதற்கு முக்கிய காரணமாக இருந்த ஜடேஜா தனிப்பட்ட முறையில் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாதவர் என நவஜோத் சிங் சித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைவதற்கு ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சதம் அடித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தது முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

லார்ட்ஸ் சம்பவம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான லார்ட்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்காக ஒரு முனையில் நின்று மிக கடுமையாக ரவீந்திர ஜடேஜா போராடினார்.

இறுதியில் சிராஜ் விக்கெட் இழக்க இந்திய அணி தோல்வி அடைந்தது. அதே சமயத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஜெயிப்பதற்கு நல்ல வாய்ப்பில் இருந்த பொழுது ரவீந்திர ஜடேஜா ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து போட்டி ஆவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

ஜடேஜா கபில்தேவ் கிடையாது

இதுகுறித்து நவ்ஜோத் சிங் சித்து கூறும் பொழுது ” நான் ரவீந்திர ஜடேஜாவை நிறைய பாராட்டி இருக்கிறேன். ஆனால் கபில்தேவ் ஒரு பவுலிங் ஆல்ரவுண்டர். அவர் வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகள் பலவற்றை வென்று கொடுத்திருக்கிறார். ஆனால் ஜடேஜா ஆசியாவில் மட்டுமே சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார்”

இதையும் படிங்க : டிராவுக்கு ஆடிட்டு சதம் எதுக்கு?.. ஜடேஜா சுந்தர் செஞ்சது தப்பு.. இல்லனா அத செஞ்சிருக்கலாம் – ஸ்டெய்ன் விமர்சனம்

“ஜடேஜா தனது ஓவர்களை மிகவும் விரைவாக வீசுகிறார். மேலும் அதிக ரன்கள் தராமல் கட்டுப்பாட்டுடனும் தொடர்ந்து இருக்கிறார். ஆனால் வெளிநாடுகளில் அவரால் டெஸ்ட் போட்டியை தனிப்பட்ட முறையில் சிறப்பாக செயல்பட்டு வெல்ல முடியவில்லை. இது இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே தெளிவாகத் தெரிந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -